சி.வி.ராமனை தெரிந்த அளவிற்கு சி.சுப்ரமணிய அய்யரை (C.S.Iyer) தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு நோபல் பரிசால் இந்தியப் புகழ் அடைந்த சி.வி.ராமன், சந்திரசேகர் (இவர் மகன்) குடும்பத்தை சேர்ந்தவர் இவர். சி.வி.ராமனின் சகோதரர்.தன் தம்பி, மகன் இருவரும் நோபல் பரிசைப் பெற்றவர்கள்;இவரோ இசை ஆர்வலர்,வயலின் இசைப்பதில் தேர்ந்த கலைஞர். The Art and Technique of Violin Play என்ற புத்தகத்தை 1941 எழுதியவர்.மெட்ராஸ் பிரசிடென்சியில் 1922 தன் முதல் கச்சேரியை ஆரம்பித்துவைத்து, தன் வாழ்நாள் முழுவதும் வயலினுக்காகவே உருகினார்.வயலின் வாசிப்பில் மேல் அவருக்கிருந்த ஆர்வம் ஐரோப்பா வரை கூட்டிச் சென்றது.
பல நாடுகளுக்கும் சென்று கிழக்கிசையை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக அவர் 1933இல் ஐரோப்பாவில் பல மேற்கிசை வயலின் இசைப்பவர்களுடன் மேடை கச்சேரி செய்தார். ரவிசங்கர் போல் கிழக்கு-மேற்கு இசை நுணுக்கங்களுக்கு தன் பயணங்கள் வழியே வித்திட்டவர். அதுவரை கிழக்கிசையின் மேல் பற்றுகொண்டு இந்திய இசையை கற்றுக் கொள்ள இந்தியாவிற்கு வந்தவர்களே அதிகம். முதல் முறையாக தன் வாழ்க்கையையே பாலமாக கொண்டு, தன் ஆராய்ச்சிகளிலிருந்து ஓய்வெடுத்து, இந்த பயணங்களை அவர் மேற்கொண்டார். அப்படி என்ன செய்தார்? முதலில் வயலின் 18ஆம் நூற்றாண்டில் மேற்கிலிருந்து வந்த கருவி. இதை லாவகமாக கர்நாடக சங்கீதத்தில் புகுந்து கொண்டு, நம் 'இசை கலாசாரத்தோடு' ஒன்றிவிட்டது. இதனால் வயலினை மேற்கிசை கலைஞர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஒன்றும் இல்லை - என்ற எண்ணத்தை முதலில் மாற்றினார். மேற்கே, கர்நாடக சங்கீத கலைஞர்களைப்போல வயலின் மடியில் ஏந்தி வாசிப்பதில்லை. அவர்கள் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, காலில் படாதவாறு கைகளால் பிடித்துக்கொள்வார்கள். நம் கர்நாடக சங்கீத பாணி வித்தியாசமானது, கழுத்தில் முட்டுக்கொடுத்து, காலுடன் ஒரு பாலம் அமைத்திருப்போம் !! இதை முதலில் எதிர்த்தார். இந்த cramped posture வயலினின் ஒலியை பல சுரஸ்தானங்களுக்கு எடுத்து செல்ல இயலாது எனவும், கை விரலில் எண்ணை தேய்த்துக்கொண்டு கம்பிகளை பிடிப்பதால் இயல்பான பிடிப்பு இல்லாமல் வழுக்கவும் சாத்தியம் அதிகம் என்றும் தடாலடியடித்தார். இந்த handling சமாசாரம் தவிர, சி.வி.ராமனுடன் சேர்ந்து வயலின் ஒலியமைப்புகளில் பல ஆராய்ச்சி செய்துள்ளார்.அதில் ஒன்றுதான் தானியங்கி வயலின் (Mechanical automatic Violin). இதை வடிவமைத்தவர் சி.வி.ராமன்.ஒலியின் அமைப்பை ஆராயவும், இசை கருவிகளை இசைப்பவர்கள் உண்டாக்கும் தப்புகளை பிரித்தாயவும் இந்த வயலினை உருவாக்கினார்.அழுத்தம் கொடுத்து இசைத்தால் கம்பிகளிலிருந்து வரும் ஒலியலைகளை பகுத்தாய்ந்தார்.இதன் மூலம் அவர் கண்டுபிடித்த இசைக் கூறுகள் - pitch, loudness and timbre - பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். மாஸ்டர்கள் எனக் கூறப்படும் யெஹுதி மெனுஹின், லால்குடி ஜெயராமன் போன்றோரிடம் தேனினும் இனிமையாக இசைக்கும் வயலின், மற்ற இசைக் கலைஞர்களிடம் கலப்பட ஒலியை - Wolf Tone - எப்படி உருவாக்குகிறது? இதைப் பற்றி முதலில் கண்டுபிடித்ததும் சி.வி.ராமன். இதை நாம் ஊளை சுரம் என தமிழாக்கலாம். பெயரிலேயே தெரிந்திருக்க வேண்டும் - இது இனிமையான ஒலியல்ல (அப்படி கேட்பவர்கள் கண்டிப்பாக இசை விமர்சகர் ஆக முயற்சி செய்யலாம் !). வயலின் கம்பிகளை இசைக்கும்போது வரும் ஒலி, குறிப்பிட்ட அலைவரிசையில் (Frequency) உள்ளது. ஒவ்வொறு பொருளுக்கும் ஒருவித அலைவரிசை உண்டு. வாசிக்கும்போது வெளிப்படும் ஒலியின் நுண்ணலை (Octave frequencies) வயலின் அலைவரிசையுடன் ஒன்றானால் ஒரு ஒலி உருவாகும். இதுவே ஊளை சுரம். இதை சமன் செய்ய Wolf Note eliminator உபயோகப்படுத்துவர். பல வருடங்கள் ஒலி அமைப்புகளை ஆராயவே தன் நேரத்தை முழுவதும் செலவழித்தார்.இதைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் பிற்காலத்தில் ஒளி அமைப்புகளில் ஆராய்ச்சியை தொடங்கியதால், இந்த விவரங்கள் பிரபலமாகவில்லை. அபார திறனும், அதையும் தாண்டிய ஒருமுக பொறுமையுடன் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட சி.வி.ராமன் ,சி.சுப்ரமணிய அய்யர் வகையராக்களை தனித்துவம் வாய்ந்தவர்கள்.
Recent Comments