12/13/2013

NEXT POST
இருள் முனகும் பாதை - இறுதிப் பகுதி. பென்னட் தன்னிடமிருந்த ஷூமன் நாட்குறிப்புகளைப் பிரித்துப் பார்த்தார். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக தனது வாழ்வை நாட்குறிப்புகளில் சேர்ந்து வைத்திருக்கும் ஒரு கலைஞன் என அவருக்குத் தோன்றியது. கிளாராவுடன் இணைந்த பிறகு எழுதப்பட்ட நாட்குறிப்பும் ஷூமன்னின் சிறுவயதில் எழுதப்பட்டது மிக விரிவாக இருந்தன. 'பாரிசின் ஆபரா அரங்கத்தின் முதன்மை வயலின் கலைஞர் ஸ்மித் எங்களைப் பார்க்க வந்திருந்தார். பெர்லின் பில்ஹார்மானிக் குழுவினர் நடத்தும் மென்டல்சன் மாஸ்டர் கிளாசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து நபர்களில் ஒருவர். தன்னுடைய வாத்தியத் திறமை முழுவதையும் பெருமிதத்துடன் கிளாராவிடம் இசைத்துக் காட்டினார். கிளாராவை விட குறிப்பிடத்தக்க மேதை என அவனுக்கு நினைப்பு..அடேயப்பா எவ்வளவு திமிர்?' காற்றில் ஆடிய மெழுகுச் சுடர் பென்னட்டின் வாசிப்புக்குத் தடையானது. இன்னும் ஐம்பது பக்கங்களே இருந்தன என்றபோதும் பிளாக்பாரஸ்ட் கடிகாரக்குயில்கள் காலை மணி ரெண்டு என அறிவித்துவிட்டன. ஷூமன் நாட்குறிப்புகளைப் படித்து முடிக்கும்வரை செய்யும்படியான வேலை என எதுவும் பென்னட்டுக்கு இல்லை. புதிதாக ஏதேனும் அழைப்பு...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments