01/24/2013

NEXT POST
இருள் முனகும் பாதை - 2 பளிங்குத் தரை பாவித்த அந்த விசாலமான அறைக்குள் நுழைந்தபின்னாலும் உங்களால் அந்த சிறுமியை கண்டுபிடித்துவிடமுடியாது. நடனப் பயிற்சிக்காக மரப்பலகைகளால் பதியப்பட்ட அறை பியாநோக்கூடமாக அவளது அப்பா மாற்றியிருந்தார். மிக உயரமான தேக்கு மரக்கதவுகள், ஜன்னல் சீலைகள். ஒரு பெரிய அரசவைக்கு அரங்கத்துக்கு உண்டான அலங்கார வேலைப்பாடுகள். பாரீஸ் கபேக்களின் அண்மைக்கால பேசுபொருளாக இருக்கும் அனைத்து வகை பியானோக்களும் அங்கு இருந்தன. அறையின் மூலையில் இருந்த ஒக் மரத்தாலான பியானோவை வாசித்துக்கொண்டிருந்தாள் அந்த சிறுமி. உங்கள் காதுகளுக்கு கனத்த பியானோ தந்திகள் அதிர்வு இனிமையாகத் தோன்றலாம். அவளுக்கு அருகே உட்கார்ந்திருந்த அவளது தந்தை பிரெட்ரிக் தூங்குவது போல கண்ணைக் மூடிக்கொண்டிருந்தார். அவரது கைவிரல்கள் தன்னிச்சையாக தூரிகையாக மாறி காற்றில் ஓவியங்களைத் தீட்டிக் கொண்டிருந்தன. அச்சிறுமியின் முகத்தில் லயிப்பு சிறிதளவு கூட இல்லை. சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப் போல அவளது மெல்லிய விரல்கள் ஸ்டைன்வே பியானோவின் விசைகளை பாலே நடனக்காரியின் கால்களைப் போல் தாவித்தாவி...
PREVIOUS POST
இருள் முனகும் பாதை - 4 ராபர்ட் ஷூமன் கண்மூடி உட்கார்ந்திருந்தான். மாலை நேர செந்நிற வெயில் வனத்தின் இடைவெளி வழியாக விடாமல் நுழைந்தது. தூரத்தில் மரங்கொத்தி பறவையின் ர்டீட் ர்டீட் ஒலி கேட்டது. சுழல்கள் மண்டிய நதிக்கு முன்னால் பத்து வயது ஷூமன் உட்கார்ந்திருந்தான். ஒன்றிரண்டு தங்க நிற முடிக்கற்றைகள் அவனது மேல் உதடுவரை வழிந்திருந்தது. மோனமான புன்னகை அரும்பிய முகத்தில் காற்றின் அசைவுக்கேற்ப வெயில் நிழலாடிக்கொண்டிருந்தது. சட்டென அவனருகே இருந்த மரக்கிளையிலிருந்து பறவைகள் கூட்டாக சிதறிப் பறந்தன. வெளிச்சத்திற்குப் பழக சிரமப்பட்டன கண்கள். ஆற்றின் மறுகரையில் துலாம்பரமாக ஒரு உருவம் கையசைத்துக் கூப்பிட்டது. பச்சையும் சாம்பலும் கலந்த அவ்வுருவத்தின் சமையலறை உடுப்புத் தெளிவானது. அவனது அம்மா சத்தமாகக் கத்திக்கொண்டு கையசைப்பது தெரிந்தது. 'எமிலி இறந்துவிட்டாள். ஆற்றோடு போய்விட்டாள். சீக்கிரம் வந்துத் தொலை..' எங்கிருக்கிறோம் எனப் புரியாமல் சட்டென எழுந்துவிட்டான். கனமான மரப்பாலத்தை வேகமாகத் தாண்டி தனது வீட்டை நோக்கி விரைந்தான். முன்செல்ல எத்தனிக்கும் குதிரை போல...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments