12/11/2012

NEXT POST
ஆம்னிபஸ் - ஜொனாதன் லிவிங்ஸ்டன் எனும் கடற்புள்ளு நண்பர் பாஸ்கர் ரொம்ப நாட்களாக ஆம்னிபஸ் தளத்தில் நடக்கும் புத்தக விமர்சன முயற்சிகள் பற்றி குறிப்பிட்டு வந்துள்ளார். தினம் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவது என்பது சாதாரண காரியமல்ல. அதுவும் ஆம்னிபஸ் தளத்தில் எழுதப்படும் பலவகையான புத்தகங்களைப் பார்க்கையில் சமயத்தில் பொறாமைகூட வந்துவிடுகிறது. தினம் சமையலா என முணுமுணுப்பதைக் காட்டிலும் தினம் சாப்பிட வேண்டுமா என கேள்வி கேட்பவர் குறைவு என்பதை நமது ஹோட்டல்களில் கூடும் கூட்டத்தை வைத்தே சொல்லிவிடமுடியும். அது போலத்தான் இந்த தளத்தை நடத்தும் அன்பர்கள் யாரும் சாப்பிட முணுமுணுப்பதில்லை, சமைப்பதில் ரோட்டா போட்டு ஒவ்வொருவர் ஒரு நாள் எனப் பிரித்துக்கொண்டிருப்பதால் பெரும் பாரமாகத் தெரிவதில்லை என்றார். மிக மகிழ்ச்சியான விஷயம். இங்கிலாந்துப் பகுதியில் கூடும் பறவைகள் பற்றி முன்னர் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். How to be a bad birdwatcher எனும் புத்தகத்தைப் படித்தபின் பறவைகளைக் கவனிப்பதில் (எலெக்ட்ரிக் கம்பியைப் பார்ப்பது போல ஏனோ பறவைகளைப் பார்ப்பது...
PREVIOUS POST
Spring, Summer, Autumn, Winter தந்தியிசை கன்சர்ட்டோ வகையில் விவால்டியின் நான்கு பருவங்கள் (Four Seasons) மிகவும் பிரபலம். போன வாரம் பார்ப்பிகன் அரங்கில் மோசார்ட் சிம்பொனி குழுவினர் இசைத்த இந்த கன்சர்ட்டோவை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. சிம்பொனியைப் போலல்லாது சிறு தந்தியிசைக் குழுவினரின் கன்சர்ட்டோக்கள் சேம்பர் இசை வடிவில் அமைந்திருக்கும். வி.எஸ்.நரசிம்மனின் Madras String Quartet குழுவினர் சேம்பர் வகையினராக இருந்தாலும், ஒரே ஒரு வயலின் மட்டுமே இசைப்பதால் கன்சர்ட்டோ எனும் அமைப்புக்குள் அடங்காது. இப்படி பிரித்து வகைபடுத்துவது ஒரு செளகரியத்துக்காக மட்டுமே. பறவைகளை இனம் காண்பதற்காக அவற்றின் இறெக்கை வடிவம், உணவு முறை, இருப்பிடம் சார்ந்து வகைப்படுத்துவதைப் போல, ஒழுங்காகப் பிரித்து அமைத்துக்கொள்வது இசை வடிவை அடையாளம் காணப்பயன்படும். விவால்டியின் நான்கு பருவங்கள் நான்கு விதமான கன்சர்ட்டோக்கள் அடங்கியது. வசந்தகாலம், வெயில் காலம், இளவேனில் காலம், குளிர் காலம் என பருவத்தை இசையின் அடையாளமாக மாற்றியுள்ளார். பொதுவாக இயற்கையை நம்பி வாழும் விலங்கினங்களின் குணாதிசய...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments