10/04/2012

NEXT POST
'சற்று முன்பு' - ஊழித் தாண்டவம். ஆறு மாதங்களாக ஆறப்போட்ட தளத்தை 'சற்று முன்பு' பாடல் திறக்க வைத்துவிட்டது. வேலை கிடைக்க மூன்று மாதங்கள் அலைக்கழிய, கிடைத்த வேலை ஒரு மாதமாக புரட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் 'நீ தானே என் பொன்வசந்தம்' படப்பாடல் வெளியீடு. ராஜா இசை வந்தவுடன் வெளியாகும் புராணங்கள் சிறிதும் ஏமாற்றாமல் வந்துவிட்டன. 'செந்தூரப்பூவே செந்தூரப்பூவே பாடல் மாதிரி இல்லைங்க' என்பது முதல் 'ராஜாவெல்லாம் அடங்கிப் போய் மாமாங்கம் ஆச்சுங்க' என கோச் வண்டி போல வரிசையாக விமர்சனம் ஒரு பக்கம். இன்னொரு எல்லையில் ராஜா எது போட்டாலும் தேவகானம் தான் என கொக்கரித்து விசில் அடிக்கும் ரசிகர்களின் அதீதக் கொண்டாட்டம். இடைபட்ட கூட்டுரோட்டில் பாடலைக் கேட்டு ரசித்தவர்கள் கூட என்ன சொல்வது, எப்படி சொல்வது என மற்றவர்களது ரியாக்ஷனுக்காக காத்திருந்தது என வழக்கமாக ராஜா இசைக்கு வரும் சகல வரவேற்பும் 'நீ தானே என் பொன்வசந்தம்' பாடல்களுக்கு வந்துவிட்டன. வெளியான முதல் நாளிலிருந்து...
PREVIOUS POST
அபிஷேக் ரகுராம் ஒரு டயரிக்குறிப்பு - 2012 அக்டோபர் முடிய இருக்கும் மூன்று இரவுகளுக்கு முந்தைய இரவில் லண்டனில் ரிக்மேன்ஸ்வொர்த் எனும் குக்கிராமத்தில் அபிஷேக் ரகுராமின் கச்சேரியை முதல்முறையாகக் கேட்டேன். அபிஷேக் ரகுராம் (பாலக்காடு ரகுவின் பேரர்) கக்சேரிக்குப் (வயலின் - மைசூர் ஸ்ரீகாந்த், கஞ்சிரா - அனிருத் அத்ரேயா, மிருதங்கம் காரைக்குடி மணி) போய் வந்த கையோடு இந்தப் பதிவை எழுதுகிறேன். யூடியூபில் அவரது ஒருசில பாடல்களை மட்டுமே இருப்பதாலும், நேரடியாகக் கச்சேரியில் கேட்பது இந்தியா செல்லும்போது மட்டுமே சாத்தியம் என்பதாலும் திறமையான இளைஞனைப் பற்றி மற்றவர்கள் சொல்லிக் கேட்டதோடு சரி. நண்பர் பிரபு [சொல்வனத்தில் இவரது நல்லதொரு கதை வந்திருக்கு, படிச்சீங்களா?] அபிஷேக் ரகுராம் லண்டன் வருகிறார், அதுவும் உங்க வீட்டு ஏரியாவிலேயே (ஐந்து நிமிட நடை) கச்சேரி எனச் சொன்ன நாள் முதல் இதற்காகக் காத்திருந்தேன். இன்று கைகொடுக்காத வானிலையினால் நண்பர்களுடன் செல்ல இருந்த ஒரு நாள் பயணத்தையெல்லாம் அதிரடியாக...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments