09/11/2012

NEXT POST
உப்புவேலி - மறிகடல் பாழ்பட ஜெயமோகன் 'உலகின் மிகப்பெரிய வேலி' கட்டுரையில் குறிப்பிட்டிருந்த 'The Great Hedge of India' புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தேன். இங்கிலாந்தின் சில நூலகங்களில் இது வெறும் நோக்குநூலாக மட்டும் வைத்திருக்கும் ரகசியம் புரியவில்லை. மிக மிக சுவாரஸ்யமான புத்தகம். வெள்ளைக்காரன் வந்ததால் தான் நமக்கு ரயில் கிடைச்சது, இங்கிலீஷ் படிச்சோம், நம்ம அறிவு வளர்ந்தது என ஐரோப்பா சர்வாதிகாரத்தை விதந்தோம்பும் என் நண்பர்கள், மாமாக்கள், தாத்தாக்களுக்கு பல பிரதிகள் வாங்கிச் செல்லவேண்டும் என எண்ணிக்கொண்டேன் (சீக்கிரம் தமிழில் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறேன், இல்லையென்றால் இதையும் வெள்ளைக்காரன் சொல்லித்தான் தெரிந்தது, இங்கிலீஷு படிச்சதினால தான தெரியவந்ததுன்னு கிளம்புவார்கள் :)) ஆங்கிலேய ஆட்சியின் சில புதிய பக்கங்களை இந்த புத்தகம் நமக்கு காட்டுகிறது. குறிப்பாக, உப்பு போன்ற மிகவும் அடிப்படையான உணவைக் கட்டுப்படுத்தும்போது பாதிப்படைந்த தலைமுறையின் நிலை என்னை மிகவும் வருத்தமாக்கியது. வியாதிக்கு குறைவிலாமல் லட்ச லட்சமாக மக்கள் மடிந்து போனதை...
PREVIOUS POST
ஏன் ஒரு மாபெரும் ஆபரா பிறக்கவில்லை? கிரேக்கத்துக்குப் போய் தமிழிசை யுடர்ன் அடித்தது என பக்கிரிசாமி பாரதி சொல்வதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பார்த்தால் மேற்கிசை, இந்திய செவ்வியல் இசை இரண்டும் பாடல் வரிகளை ஒலி வடிவமாக வெளிப்படுத்துவதில் தான் பல்லிசையாக உருவானது. சிவனடியார் ஆறுமுகசாமி, அரையராக வடிவெடுத்த ராமபாரதி என இன்றும் அது ஆரம்பகால வடிவில் இருக்கு. நான் பார்த்தது ஸ்ரீரங்கம் அரையர் கோஷ்டி தான்- அதில் ஒரு கோஷ்டி முதல் வரியைப் மேல் ஸ்ருதியில் பாட, மற்றொரு கோஷ்டி இடைபுகுந்து கீழ் ஸ்ருதியில் அடுத்த வரியைப் பாடத் தொடங்கும். இது ஒலிவடிவில் ஹார்மனியின் பாணி. ஏற்ற இறக்கங்களோடு அவர்கள் பாடும்போது தனித்தனியாக கேட்பதை விட இன்னும் அதிக இனிமையாக இருக்கும். ஆனால் இடையில் எங்கோ இந்த பாணியில் பாடுவது பெரிதளவு தொலைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. இன்றும் ஓதுவார்கள், அரையர் கோஷ்டிகளில் இதன் ஆரம்பகால வடிவைக் கேட்கலாம். ஆனாலும், மக்கள் இசையில் பெரிதளவு புழங்கவில்லை. ஏன்? திட்டவட்டமாக இதுதான்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments