01/06/2012

PREVIOUS POST
பலி லியான் வீட்டுத் தோட்டம் இரண்டாம் நாளாக வெறிச்சோடிக் கிடந்தது. அவன் இன்றும் விளையாட வரவில்லை. * தோட்டம் நீளவாக்கில் தெரு வரை நீண்டிருந்தது. வீட்டு வாசலே இல்லையோ எனச் சந்தேகம் வருமளவு அப்பார்ட்மெண்டுக் குழந்தைகள் மாலை முழுவதும் அவனது தோட்டத்திலேயே பழியாய்க் கிடப்பார்கள். வாசல் சந்தடியில்லாமல் இருக்கும். முதல்முறை பார்த்தபோது, ` என்னோட பர்பிள் பேபி பொம்மை வேணுமா?` என லியான் கேட்க, சொல்லத்தெரியாமல் 'ஹ.ஹ்ம்' என மேலும் கீழும் தலை ஆட்டிய சுமி அவனது பொம்மைகளிலிருந்து எடுத்த பர்பிள் பேபியைத் திருப்பிக் கொடுத்தாள். அருகிலிருந்த ஏடன் பழுப்பு நிறக் குச்சியால் மண்ணைக் குத்திக் கொண்டிருந்தான்; ஒரு கிளை வழியாக ஏறி இன்னொன்று வழியாக இறங்க முடியுமா எனப் பார்த்துக்கொண்டிருந்தான் கால்வின். அவரவர் உலகின் ஆழத்துள் அவரவர் ஏகாந்தமாக அமிழ்ந்திருந்தார்கள். தன் வீட்டுக்குள் குடுகுடுவென ஓடி உள்ளிருந்து நடுத்தர வயது நபரை அழைத்து வந்தான் லியான். லண்டனுக்கு வந்த புதிதில் புதியவர்களைப்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments