10/31/2011

NEXT POST
நாவல் - செளரிங்கி - பின்காலனிய கல்கத்தாவின் கதை. சில வருடங்களுக்கு முன் பெங்களூரில் இருந்தபோது 'சிகப்புக் கம்பளம்' (The Red Carpet) எனும் சிறுகதைத் தொகுப்பை படித்தேன். லாவண்யா சங்கரன் எனும் அமெரிக்க இந்தியர் எழுதிய பதினைந்து கதைகளின் தொகுப்பு. பெங்களூரை முன்வைத்து எழுதியதால் கதைகளோடு மிக நெருக்கமாக உணரமுடிந்தது. மாறிவரும் நகர்புற பெங்களூர்,மென்பொருள் மின்னணு நிறுவனங்களின் நிலை, சிற்றூர்களிலிருந்து நகரத்தில் இருக்கும் அதி-நவீனமான நிறுவனங்களில் தங்களைப் பொருத்திப் பார்க்கும் இளையவர்களின் நிலை பற்றி மிக அழகாக எளிமையாகச் சொல்லப்பட்ட கதைகள்.சிகப்புத் தரைவிரிப்பு என்பது ஒரு உலகத்திலிருந்து மற்றொரு மேலான உலகுக்கான வெத்திலை தாம்பூல அழைப்பு மட்டுமல்ல, அது இரு உலகுக்கு இடையேயான ஊசலாட்டம் என்பதை அழகாக கதைகளில் காட்டியிருப்பார் . ஆனாலும் நவீன இந்திய - ஆங்கில நாவல்கள் மேலிருந்த கசப்பு குறையாமலிருந்து. இந்தியாவின் ஆன்மாவை சரியாகக் காட்சிபடுத்தும் சில இந்திய-ஆங்கில புனைவு/அபுனைவு நூல்களைப் படிக்கும்போது கொஞ்சம் நம்பிக்கை வரும். திடீரெனப் இதுதாண்டா பெஸ்ட்செல்லர் என அடிபடும் இந்திய-ஆங்கில...
PREVIOUS POST
Departures நண்பர் அய்யனார் கூகிள் பஸ்ஸில் Departures என்ற ஜப்பானியத் திரைப்படம் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். குறிப்பாக படத்தின் நாயகன் செல்லோ கலைஞன் என்றவுடன் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இசைக் கலைஞர்களைப் பற்றிய படங்களில் பொதுவாக பின்ணணி இசை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் ஒரு காரணம். பொதுவாக இம்மாதிரி புகழ் பெற்ற அ-ஆங்கிலப் படங்களை லவ்பிலிம் தரவு வரிசையில் போட்டால் வருவதற்கே மாமாங்கம் ஆகிவிடும். ஆச்சர்யமாக இந்தப் படம் ஒரே வாரத்தில் வந்து சேர்ந்தது. முழு கதையைச் சொல்லி, காமிரா கோணங்கள் மேக்கிங் சில்லாப்புகளை விவரித்து, பின்னணி இசையின் ரசாபாவத்தை சிலாகித்து (என்னையும்) உங்களைப் படுத்தப்போவதில்லை. ஆனால் இந்தப் படம் என்னை மிகவும் அழ வைத்தது. அதைப் பற்றி மட்டும் இந்தப் பதிவில் எழுதப் பார்க்கிறேன். நான் பொதுவாக மசாலாப் படங்களை அதிகம் பார்ப்பவன், ரசிப்பவன். மிகவும் கலைத்துவமான உலகப் படங்கள் என ஒருசிலவற்றை மட்டுமே பார்த்துள்ளேன். அவற்றில்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments