10/12/2011

NEXT POST
நித்ய கன்னி - கனவின் பயணம். சொல்வனம் இதழில் 'மித்திலன்' நித்ய கன்னி நாவலை அறம் பற்றிய விசாரணையாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை கச்சிதமாக முன்வைத்துள்ளார். அக்காலகட்டச் சமூகப் போக்கையும் இன்றைய விழுமியங்களையும் ஒப்பிட்டால் நித்ய கன்னி மேலும் பல விஷயங்களைக் கொண்டிருக்கிறாள் எனப்படுகிறது. இதற்குத் துணையாக ராஜ் கெளதமன் முன்வைத்த தமிழ் சமூக அறம் குறித்த பார்வையை போட்டுப்பார்க்கலாம் ('தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்'). நித்ய கன்னி, புராண மகாபாரத மாதவிக் கதையின் மறு உருவாக்கம். இந்த நூற்றாண்டுக் கண்ணோடு முரணியக்க முறையில் அறத்தையும், அழகியல் நோக்கையும் விவாதப் பொருளாக உட்படுத்துகிறார் எம்.வி.வெங்கட்ராம். மகாபாரத மாதவி காலகட்டம் இனக்குழு சமூகத்திலிருந்து, உடைமைச் சமூகமாக (அதிகாரம், மன்னராட்சி) மாறிய காலகட்டம். இனக்குழு சமூகத்தில் இருந்த அறம் எப்படிப்பட்டது - அதிகாரத்தை நோக்கிக் குவியாத, உணவு விளைச்சல் செய்யாத காலம். பாணர்கள், விறலிகள் போன்றவர்கள் ஒன்றாகப் பகிர்ந்து உணவை உண்ட காலம். அதாவது உணவு சேகரிப்பு இருந்தாலும் உணவு சேமிப்பு பற்றித்...
PREVIOUS POST
இரைச்சலற்ற வீடு லண்டன் வாழ் மக்களின் சந்தோஷங்கள் வெம்ப்ளி கால்பந்தாட்ட மைதானத்தில் விளையாடும் சிலரது கால்களில் திரண்டுகொண்டிருந்தன. தேன் கூட்டைக் கலைத்தது போல கூச்சலும் குழப்பமுமாக இலக்கை மட்டும் கருத்தில் கொண்டு எங்களைக் கடக்கும் கால்பந்தாட்ட ரசிகர் கூட்டத்துக்குப் புறமுதுகிட்டு ரஞ்சனா வீட்டுக் கதவுமுன் மனைவி ராதாவுடன் நின்றிருந்தேன். உலகின் பெருங் கவலைகளெல்லாம் ரஞ்சனாவின் முகத்தில் தெரியும் என்ற எதிர்பார்ப்போடு என் முகம் சோகத்தை கொஞ்சம் அதிகமாகவே பூசியிருந்தது. சஞ்சலம் கொஞ்சமும் இல்லாது முன்விழுந்த மயிர்க் கற்றைகளை ஒன்றாய் சேர்த்து காதுக்குப் பின் கொக்கியாக மாட்டியபடி கதவைத் திறந்தாள் அவள். 'உள்ள வாங்க' என வரவேற்று ஹாலுக்குத் திரும்ப நடக்கும்போது, துணி காய்ந்து கிடப்பது போல அவளது நீண்ட கூந்தலில் ஆங்காங்கே மாட்டியிருந்த கிளிப்புகள் அதிர்ந்து ஆடின. க்ஷண நேரம் மட்டுமே நீடித்த அற்புத நடனம். மீறல் கலையைக் கச்சிதமாகக் கற்றுக்கொண்டிருந்தாலும் நாங்கள் ஹாலுக்குப் போகும்வரை ஆட்டத்தின் தாளகதிக்கு மனம் ஆதரவு தெரிவித்துக்கொண்டிருந்தது. சே!...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments