05/18/2011

NEXT POST
இசை நுணுக்கங்களைப் பற்றி எழுத முடியாதா? இசை நுணுக்கங்களை வார்த்தைகளில் விளக்க முடியாது என்பது எழுதத்தெரியாதவனின் சாக்கு. உதாரணம் - ஹெக்டர் பெர்லியோவின் (Hector Berlioz) இசை விமர்சனங்கள். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிய விமர்சனங்கள், இசை நுணுக்கங்களுக்கு மேலும் உயிர் சேர்த்தன. இசையில் சொல்ல முடியாததை எப்படி வார்த்தையில் சொல்வது எனக் காலங்காலமாகக் கேட்கும் மேதாவிகளுக்கு, பெர்லியோவின் கட்டுரைகள் முகத்தில் அறைவது போல் இன்றும் இருக்கின்றன. பீத்தோவன் பற்றி எழுதிய விமர்சனங்களைப் படித்தால் அவரது இசையின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் இப்படி ஆராய்ந்தவனும் உண்டோ எனத் தோன்றும். கைப்பிடிச் சோறு போல் விரலிடுக்கில் அள்ளி, கடலை அளக்க பார்த்தவன் போல் பெர்லியோ முயன்றிருக்கிறார். 'இசையைப் பற்றி எழுதும்போது நான் எழுதுவது இசையை அல்ல; காற்றின் அலைகழிப்பை மட்டுமே. அந்த அலைகழிப்பை சொற்களில் வடிக்கும்போது இசை உணர்வுகளை என்னால் விளக்க முடிகிறது' - பெர்லியோ. உண்மை. அவரைப் பற்றி இந்த இணையத்தளத்தில் வாசிக்கலாம். இதைத் தவிர இவரது Evening...
PREVIOUS POST
சொல்வனம் - பொக்கிஷம்! சொல்வனம் ஐம்பதாவது இதழ் வெளியாகியுள்ளது. முன்னர் இசை சிறப்பிதழாக வெளிவந்து பல அற்புதமான கட்டுரைகளை வெளியிட்டார்கள். இந்த முறை எழுத்தாளர் தி.ஜானகிராமன் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. ஒரு எழுத்தாளனின் படைப்பில் வெளிப்படும் முகம் வாழ்வு பற்றிய அவரது கண்ணோட்டமாக கருதப்படுகிறது. கோபம், கரிசனம், இயலாமை என தன்னை பாதித்த விஷயங்களைப் பற்றிய பட்டியலாக கலைஞனின் படைப்புகளை காண முடியும். இவ்வகையில், தி.ஜாவுடன் பழகிய பல எழுத்தாளர்கள் அவரைப் பற்றி கட்டுரைகளில் நினைவுகூர்ந்துள்ளனர். சொல்வனம் சிறப்பிதழில் வெளியான கட்டுரைகள் தி.ஜாவைப் பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றத்தை பதிவு செய்கிறது. அவரது ஆசாபாசங்கள், நம்பிக்கைகள், அபிலாஷைகள், தோல்விகள், ரணங்கள், ஆன்மிக பகிர்வுகள் என ஒவ்வொருவர் பார்வையிலும் உணர்ச்சிக் குவியலாக தி.ஜா பதிவாகியுள்ளார். இவை எல்லாவற்றையும் எழுத்திலும் வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளதே தி.ஜாவின் சிறப்பு. அவ்வகையில் இவ்விதழை மிகச் சிறப்பான பொக்கிஷமாகக் கருத வேண்டும். அவருடன் பழகிய கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி, தஞ்சை பிரகாஷ், வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன் (பேட்டி)...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments