03/03/2011

NEXT POST
அன்பே நீ என் ஜீவன்;நான் உன் தேவன்! எந்நேரத்திலும் பிரசவம் என்ற நிலையில் முட்டிக்கொண்டு பிதுங்கிய நிலையில் சில வருடங்களுக்கு முன் பல ஹார்ட் டிஸ்குகள் என்னிடம் சேர்ந்திருந்தன. பெங்களூரில் இருந்த சமயம். வகைதொகையில்லாமல் கிடைத்த எல்லா பாடல்களையும் mp3 வடிவத்துக்கு மாற்றி சேகரித்துக்கொள்வேன். வீட்டுப்பிராணிகள் போல் சமர்த்தாக பகுப்புக்குள் அடங்கும் திரையிசைப் பாடல்களைத் தவிர ஆங்கில பாப் ஆல்பங்கள், மைக்கேல் ஜாக்ஸனின் மேடையாட்டங்கள், ABBA , பீட்டில்ஸ், பிரின்ஸ் என கட்டுக்குள் அடங்காதவையும் அதில் அடக்கம். வீடு மாறும்போதெல்லாம் ஹார்ட் டிஸ்குகளை வைத்துக்கொள்வதா வேண்டாமா எனப் பரிசீலனை எழும். இன்று அனேகமாக இத்தொகுப்புகள் தேவையில்லை. எல்லாம் இணையத்தில் கிடைக்கின்றன. தேவையானதை தரவிறக்கிக்கொள்ளலாம். போன மாதம் வீடு மாறியபின்னர் கையடக்கமாக 1TB ஹார்ட் டிஸ்க் வாங்கி இவற்றையெல்லாம் கூட்டுக்குடும்பமாக ஒரு டப்பாவுக்குள் அடக்கியாயிற்று. ஆனால் மறுபடியும் பழைய பிரச்சனை தலைதூக்கியது. தொகுப்புக்குள் அடங்காத தமிழ் ஆல்பங்களை என்ன செய்வது? இன்று அனேகமாக தமிழ் பாப் ஆல்பம் வருவதில்லை என்றே நினைக்கிறேன்....
PREVIOUS POST
மெளன கோபுரம் Tower of Silence: பார்ஸி இனத்தவர்கள் இறந்தவர்களைப் பிரியும் இடம். வெள்ளை சிறகுகளை சுருட்டி மடித்துக்கொண்டு லாகவமாக மொட்டை சுவற்றில் வந்து உட்கார்ந்த கழுகு, தரையிலிருந்து பார்க்க சின்ன குருவிபோல இருந்தது. தன் கூட்டத்துடன் உட்கார்ந்ததில் ராஜாக்களின் கம்பீரம் தோற்றது. சார்வர் இதே மொட்டை சுவற்றை கடந்த ஒரு வருடமாக பார்த்து வருகிறார்.கழுகுகள் முன்னிருந்தது போல் இப்போதெல்லாம் வருவதில்லை. பலாஷிடம் கேட்டுப் பார்த்தார். ’நானும் கொஞ்ச காலமாய் பார்த்துவருகிறேன், குறைவாகத் தான் இருக்கின்றன’ . பலாஷ் சார்வரின் டாக்டர். ‘உங்களுக்கென்ன வயதாகவில்லையே’ - சம்பந்தமேயில்லாமல் ஜோக்கடித்தார். டாக்டரைத் தொடர்ந்து தன் வீட்டருகே இருந்த டெய்லர், பாபுபாய், அவுனிகா, ஏன் தன் கடைசி பேரன் மோட்டுவிடம் கூட கேட்டுப்பார்த்தார். யாருக்குமே தெரியவில்லை. ஆனால், யாருக்கு என்ன அக்கறை. எல்லோரும் சின்ன வயதுக்காரர்கள். தன் வயதை ஒத்தவர்களிடம் சரியான பதில் கிடைக்கலாமென, மோட்டுவின் ஸ்கூல் அருகே இருந்த பூங்காவுக்குள் நுழைந்தார். தன் பிறப்பின் அர்த்தமே...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments