சில நண்பர்கள் பழமையை, பண்டைய இந்தியாவை, மரபை தூக்கிப் பிடிக்கும் நூலாக ’வெள்ளிப்பனி மலை மீது’ புத்தகத்தை முன்னிறுத்தினார்கள். படித்துப் பார்க்கும்போது நமக்கு வேறொரு சித்திரம் கிடைக்கிறது. அதைப் பதிவு செய்வதே இந்த அறிமுகத்தின் நோக்கம். குறிப்பாக கலாசாரம், மரபு, இந்தியா எனும் கருதுகோள்கள் இன்றைக்கு எதிர்மறையான சங்கதிகளாகிவிட்டன. இந்தியாவின் வலிமைகளாகக் கருதுபவை அதே நேரத்தில் பலவீனங்களாகவும் மாறிவிட்டன. வரலாற்றாய்வாளர்கள், ஊடக அறிவின் ஊற்றாக இருப்பவர்கள், கல்வியாளர்கள், நாட்டை ஆள்பவர்கள், ஆளப்படுபவர்கள் என ஒவ்வொருவருக்கும் அசோகர் ஸ்தூபி போல் இந்தியா வெவ்வேறு முகமாக காட்சியளிக்கிறது. அவற்றில் எது முழு உண்மை? உதிரி உண்மைகள் தொகுக்கப்பட்டால் வெளிவருவது நிழற்படம் மட்டுமே என ஆய்வாளர்களும், பதியப்பட்ட வரலாறு நம் கோழைத்தனத்தின் அவலக்காட்சிகள் மட்டுமே என கூக்குரலிடும் சில தேசிய கட்சிகளும், செய்தியோடை மற்றும் தலைப்புச்செய்திகள் மட்டுமே இன்றைய நவீன இந்தியா என நம்பவைக்கப் பிரயத்தனப்படும் ஊடகங்களும் என்ன மாதிரியான வரலாறைப் பதிவு செய்கின்றன?
வெள்ளிப்பனி மலை மீது எனும் பின்புலத்தில் வரலாறு, மரபு, ஐதீகம், கலாசாரம் போன்ற இந்திய வளமைகளுக்குள்ளும் இந்நூலாசிரியர் பயணம் செய்கிறார். பயணக்குறிப்பு நூலில் வரலாறு, மரபு, ஐதீகத்துக்கான தேவையென்ன? தத்துவம், மதங்கள், மனித மனங்கள் ஊடாக நுண்மையான வாழ்க்கைச் சித்திரிப்பை மட்டுமே இந்நூலாசிரியர் தேடுகிறார் எனத் தோன்றுகிறது.
கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
பிரபஞ்சன் எழுதிய ’இமயம் நோக்கிய ஓர் எழுத்து யாத்திரை ’கட்டுரைக்கு இங்கே சொடுக்கவும்.
சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள், நன்றி.
ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் இருக்கிற ஒரு புத்தகத்திற்கான நல்ல அறிமுகம். புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
பண்பாடு, பாரதம் போன்ற விஷயங்களைப் பற்றி எழுதும்போது கொஞ்சம் டிபென்சிவாக இருப்பது போன்ற தோற்றம் எழுந்தது- தப்போ சரியோ தெரியவில்லை.
அதே போல், இந்த நூல் இவ்வாண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்றது என்று நினைக்கிறேன். அந்தத் தகவலையும் கட்டுரையில் இணைத்திருந்தால் புத்தகத்தை வாங்க நினைக்கும் வாசகர்களுக்கு அது ஒரு முக்கியமான செய்தியாக இருந்திருக்கும், இல்லையா?
நன்றி.
Posted by: Account Deleted | 02/01/2011 at 12:23 AM
நன்றாக இருந்தது கிரி. ஒரு சந்தேகம். இந்த புத்தகம், வட இந்தியா, இமைய மலை ஆகிய இடங்கள் பற்றி மட்டும் தான் பேசுகின்றதா அல்லது மொத்தமாக இந்தியா பற்றிய ஒரு குறுக்கு வெட்டு பார்வையை தருகின்றதா? உங்கள் பதிவில், அதிகமும் அந்த இடங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளதால் கேட்க தோன்றியது.
Ajay
Posted by: Ajay | 02/01/2011 at 07:54 AM