01/25/2011

NEXT POST
ஓ.எஸ்.அருண் பஜன் - ஆசை முகம் மறந்துபோச்சே இன்று நாள் முழுவதும் என்னைக் கட்டிப்போட்டப் பாடல். O.S.அருணின் மற்ற பாடல்களை விட இதில் கம்பீரம் குறைவே. ஆனாலும், நம் கவிஞனின் பாடல் வரிகளுக்காக எதையும் மன்னிக்கலாம். ஆசை முகம், மறந்துபோச்சே,இதை ஆரிடம் சொல்வேனடி தோழி? நேசம் மறக்கவில்லை நெஞ்சம், எனிற் நினைவு முகம் மறக்கலாமோ? கண்ணில் தெரியுதொரு தோற்றம், அதில் கண்ண னழகு முழுதில்லை நன்னு முகவடிவு காணில் அந்த நல்ல மலர்ச் சிரிப்பை காணோம்! தேனை மறந்திருக்கும் வண்டும், ஒளிச் சிறப்பை மறந்து விட்ட பூவும், வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வைய முழுதுமில்லை தோழி! கண்ணன் முகமறந்து போனால், இந்த கண்கள் இருந்துபய னுண்டோ? வண்ண படமுமில்லை கண்டாய், இனி வாழும் வழிஎன்னடி தோழி?
PREVIOUS POST
மூவர்! அலுவலக நண்பர் கொடுத்த பியானோ தொகுப்பில் சூசன் டோம்ஸின் இசையை முதல்முறையாக கேட்டேன். பூனையைத் தடவிப்பார்ப்பதுபோல் மிக மிருதுவாக விசைகளை அழுத்துகிறார். தொடுவது கூடத் தெரிவதில்லை. வருடிக்கொடுக்கிறார்.இசை தானாக வெளிப்படுகிறது. முதல்முறை மூங்கிலை உடைத்து துளையிட்டு ஊதிப்பார்த்தவனின் திகைப்பு நம்மிடம் எஞ்சுகிறது.இதோ பார் நான் விரலை மட்டுமே அசைக்கிறேன் என கலைஞர்களுக்கே பிரத்யேகமான இட்ஸ் ஈஸி தோள்குளுக்கலுடன் சிரமில்லாமல் வாசிக்கிறார். அவர் எழுதும் நாட்குறிப்பிலும் அது தெரிகிறது. இது போன மாதம் பஸ்ஸில் பகிர்ந்தது இதுவரை, ஒரு குழுவைப் பின் தொடர்ந்து அவர்களது பாணியைப் புரிந்து கொண்டதில்லை. இசை வெறும் நோட்ஸாக குறிப்புகளில் தொய்ந்திருந்தாலும், அதையும் தாண்டி வாசிப்பவர்களின் தனித்துவம் அதில் வெளிப்படும். கூட்ஸ் வண்டி போல் வரிசையாக நோட்ஸை வாசித்தால் ஒலி வெளிப்படுமே தவிர இசையாகாது. இப்படி இசைக்கலைஞர்கள் சொல்லக் கேள்வி. சரி, குழுக்களின் interpretation எனும் சங்கதியை எப்படிப் புரிந்து கொள்வது? ஒரே இசையைப் பல குழுக்கள் வாசித்திருக்கிறார்கள்....

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments