12/20/2010

NEXT POST
சுபின் மேத்தா - மேற்கிசை வகைகள் ரிச்சர்ட் ஸ்ட்ராஸிடம் கற்றுக்கொண்ட மோசார்ட்டின் வயலின் பகுதிகள்; ஷோன்பெர்கிடமிருந்து கற்றுக்கொண்ட 12-ஸ்வர அடோனல் (Atonal) அமைப்புகள் என சுபினின் பயிற்சி இரு எல்லைகளையும் இணைத்தது. மேற்கிசையில் இரு எல்லைகள் என்னென்ன? அறிவியல் அறிவு பல நூற்றாண்டுகளாக நிறுவப்பட்ட ஒன்று. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் அமைத்த விதிகள் சூத்திரங்கள் மேல் கடந்த நூற்றாண்டின் விதிகள் நிற்கின்றன. வரிசையாக செங்கற்களைக் கொண்டு கட்டப்படும் சுவர் போல் ஒரு வரிசை முறையில் அறிவியல் விதிகள் அமைந்திருக்கும். எந்த நிலையிலும் நம் இன்றைய அறிவியல் அறிவு கடந்த நூற்றாண்டுகளை விடச் சிறந்தது என்பது உண்மை. ஆனால் நுண்கலைகளின் அமைப்பு வேறுவகை. பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கிரேக்க நாடகங்களை இன்றைய தமிழ் தொலைக்காட்சி தொடருடன் ஒப்புநோக்க முடியாது. காவிய அதிபதி கம்பனின் வரிகளைத் தாண்டி இன்றளவும் கவித்துவ எழுச்சியைக் கொடுக்கும் படைப்பு அமையவில்லை என பல விமர்சகர்கள் நமக்கு உணர்த்தியுள்ளார்கள். நாம் வகுத்துகொண்ட காலத்தின் வரிசையில் மேம்பட்ட...
PREVIOUS POST
ஆப்பிரிக்கா சில நாட்களாக Ryszard Kapuscinski என்ற போலிஷ் பத்திரிக்கையாளரின் The Cobra's Heart என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். 60களின் மத்தியில் ஒரு ரிப்போர்ட்டராக ஆப்பிரிக்காவுக்கு சென்ற ரிஸ்ஸார்ட் பயணக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். ஒரு ரிப்போர்ட்டருக்குத் தேவையான கூர்மையான எழுத்து, உணர்ச்சிகளுக்கு இரையாகாத பார்வை எனச் சரியான கலவையில் இவரது எழுத்து பயணிக்கிறது.குறிப்பாக, ரிப்போர்ட்டிங் கட்டுரைகளையும் ஒரு புனைவை அணுகுவது போல் அமைத்திருப்பது அந்த காலத்தில் புதுமையாக இருந்திருக்க வேண்டும். மிகப் பிரபலமான பத்திரிக்கையாளராக உலகப் புகழ் பெற்றார். நமிபியா, காங்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகள் விடுதலையை நோக்கிப் படையெடுத்துகொண்டிருந்த நாட்களில் இவர் அங்கிருந்திருக்கிறார். தனது ரிப்போர்ட்டில் புனைவு சாத்தியங்களையும் கையாண்டு அதே சமயத்தில் அங்கு நிகழ்ந்த வெள்ளையர்களின் அரசியலையும், ஆப்பிரிக்க மக்களின் வாழ்வு முறைகளையும் தெளிவாகச் சித்தரித்துள்ளார். இவ்வளவு பெரிய நிலப்பரப்பை, பலதரப்பட்ட குழுக்களை ஆப்பிரிக்கா எனும் ஒற்றைச் சொல்லால் எப்படி அளவிட முடியாது என்பதை பல நிகழ்வுகள் மூலம்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments