09/26/2010

NEXT POST
பாப்லோ கசல்ஸ் - மீண்டெழுந்த நாட்டுப்புற இசை. இசையை உடல் அலங்காரமாகக் கொண்ட கசல்ஸை திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என அரவணைத்த சார்லஸ் லமோரே அவரைப் பாரீஸ் நகரின் பிரதானக் இசைக்கலைஞராக முன்னிறுத்தத் துவங்கினார். அந்நாளில் உலகலாவிய இசை அரங்கமாக இருந்த ஐரோப்பாவுக்குள் பிரவேசிக்க மிகப்பெரிய வாய்ப்பாக கசல்ஸுக்கு இது அமைந்தது. ஒரே இரவில் ஐரோப்பாவிலிருந்த பல இசைக்கூடங்களிலிருந்தும் அழைப்புகள் வரத்தொடங்கின. இது சாதாரண காரியமல்ல. காற்றில் ஊசலாடும் மெழுகு வெளிச்சம் போல் தத்தளித்த கசல்ஸின் தன்னம்பிக்கை சார்லஸ் லமோரேவின் அறிமுகம் மூலம் கம்பீரமாக பவனி வரத்துவங்கியது. மேலும் படிக்க சொல்வனம்
PREVIOUS POST
சுபின் மேத்தா - மேற்கிசை வகைகள் ரிச்சர்ட் ஸ்ட்ராஸிடம் கற்றுக்கொண்ட மோசார்ட்டின் வயலின் பகுதிகள்; ஷோன்பெர்கிடமிருந்து கற்றுக்கொண்ட 12-ஸ்வர அடோனல் (Atonal) அமைப்புகள் என சுபினின் பயிற்சி இரு எல்லைகளையும் இணைத்தது. மேற்கிசையில் இரு எல்லைகள் என்னென்ன? அறிவியல் அறிவு பல நூற்றாண்டுகளாக நிறுவப்பட்ட ஒன்று. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் அமைத்த விதிகள் சூத்திரங்கள் மேல் கடந்த நூற்றாண்டின் விதிகள் நிற்கின்றன. வரிசையாக செங்கற்களைக் கொண்டு கட்டப்படும் சுவர் போல் ஒரு வரிசை முறையில் அறிவியல் விதிகள் அமைந்திருக்கும். எந்த நிலையிலும் நம் இன்றைய அறிவியல் அறிவு கடந்த நூற்றாண்டுகளை விடச் சிறந்தது என்பது உண்மை. ஆனால் நுண்கலைகளின் அமைப்பு வேறுவகை. பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கிரேக்க நாடகங்களை இன்றைய தமிழ் தொலைக்காட்சி தொடருடன் ஒப்புநோக்க முடியாது. காவிய அதிபதி கம்பனின் வரிகளைத் தாண்டி இன்றளவும் கவித்துவ எழுச்சியைக் கொடுக்கும் படைப்பு அமையவில்லை என பல விமர்சகர்கள் நமக்கு உணர்த்தியுள்ளார்கள். நாம் வகுத்துகொண்ட காலத்தின் வரிசையில் மேம்பட்ட...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments