கல்லூரி படிக்கும் நாட்களில் நாம ஆங்கில பாடல்கள் மட்டுமே கேட்போமெனத் திரிந்த போது Savage Garden (1997) மிகவும் பிடித்த குழுவாக இருந்தது. தூக்கம் வராமல் இன்று சில மணி நேரங்களாகக் கேட்டு கொண்டிருக்கிறேன். ஒரு பாப் ஆல்பத்தின் காலாவதி காலத்தைத் தாண்டி இன்றும் ரசிக்கும்படி இருப்பது ஆச்சர்யம். குறிப்பாக இக்குழுவின் கிதார் பிராக்ரஷன்ஸ் பாணி ஒரு ராக் குழு போல ஒலித்தாலும், மிக இனிமையான மெலடி பாடல்களையும் தந்திருக்கிறார்கள். இதற்கு மிக முக்கியமான காரணம் இக்குழு அமைத்த பாடல் வரிகள். பாப் டிலன் போல ஒருவர் கிடைத்திருந்தால் மேலும் அதிக பிரபலமாகியிருக்கலாம்.
Truly,Madly,Deeply மிகப் பிரபலமாக இருந்தாலும் Flying to the moon and back பாடலில் வரும் பேஸ் கிதார், கூடவே ஒலிக்கும் வயலின் என இப்போது நினைத்தாலும் ஆல்பத்தின் கேசட் அட்டையைக்கொண்டு டப்பா தாளங்கள் தட்டிய நினைவு வருகிறது.
இக்குழு பிரியாமல் இருந்திருந்தால் டேனியல் ஜோன்ஸ் மிகத் திறமையான கிதார் கலைஞராக ஜிமி, ஜான் மெக்லாஹின் போல் இன்று அறியப்பட்டிருப்பார்.
ஷங்கர் மகாதேவனை பிரபலமாக்கிய Breathless பாடல் போல இக்குழுவின் I want you பாடல் சில மூச்சு விடாத பாடப்பட்ட பகுதிகளைக் கொண்டது. முழு பாடலும் மூச்சு விடாமல் பாடப்பட்டு ஆல்பத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. ஏனோ, வீடியோ தொகுப்பில் அது இல்லை.
இக்குழுவின் பாடல்களைக் கேட்டுப்பாருங்கள்.1990களின் இறுதியில் ஈசல் போல உருவான பல பாப் குழுவுக்கும் இவர்களுக்கும் உள்ள இசை வித்தியாசத்தை உணர்வீர்கள்.
இவர்களுடைய 'Animal Song' சிறப்பாக இருக்கும் அல்லவா?
இதே கால கட்டத்தில் வந்த பிரபலாமாக இருந்த Boyzone, Backstreet boys கூட சுணங்கி விட்டார்கள்
Posted by: Ajay | 08/12/2010 at 07:13 AM
அஜய்- உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.Savage Garden அளவிற்கு Animal Song பிரபலமடையவில்லை ஏனெனத் தெரியவில்லை - கொஞ்சம் மிதமான வேகத்தில் அமைந்ததால் இருக்கலாம். Boyzone, Backstreet boys காணாமல் போனதோடு பல Boy/Girl குழுக்களும் போய்விட்டதில்லையா? அந்த அலையில் தேறியவற்றில் Savage Garden முக்கியமானதாக இன்றும் பல வரிசைகளில் முன்ணனியில் இருக்கிறது.
Posted by: ரா.கிரிதரன் | 08/12/2010 at 07:34 AM