06/22/2010

NEXT POST
கிதாரை மேடையேற்றியவர் - ஆன்ரே செகோவியா எழுபத்து ஆறு வருடங்கள் கிதாரோடு வாழ்வை இணைத்துக்கொண்டு,கடந்த நூற்றாண்டில் ஈடில்லாத ஒரு இடத்தை பிடித்தவர் ஆன்ரே ஸெகோவியா (Andres Segovia). இவர் 1920களில் ஒத்தையாளாக folklore எனப்படும் கிராமிய வாத்திய இசையிலிருந்து கிதாரை அடுத்த கட்டமான கிளாசிகல் இசையை வாசிக்க ஆரம்பித்தவர்.அதுவரை கிதார் நகர மற்றும் கிராமப்புரங்களின் பொழுதுபோக்கு இசையாகவே இருந்து வந்தது.குறிப்பாக குளிர் காலங்களில் மதியான நேரங்களில் விவசாயிகள் தங்கள் நேரத்தைக் கடத்துவதற்காக கிராமிய இசையுடன் லூட் (lute) மற்றும் கிதார் இசைத்து வந்தனர். ரோமாண்டிக் இசை எனப்படும் மிகுஉணர்ச்சி இசை வடிவங்கள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில், குறிப்பாக 1800களில் கிதாரை கீழ்நிலை இசைக் கருவியாக மதித்தனர்.ப்ராம்ஸ் (Brahms) போன்ற இசையமைப்பாளர்கள் கூட கிதாரை தங்கள் இசை கருவிகளின் கூட்டத்தில் ஒன்றாகக் கருதவில்லை.வயலின்,வயலா,செல்லோ,பியனோவை மதித்தவர்கள் கிதாரை ஏழைகளுக்கான வாத்தியக் கருவியென ஒதுக்கினார்கள்.இதைப்போலவே பல அற்புதமான சத்தங்கள் கொடுத்த ஜெம்பா டிரம்ஸ் போன்ற ஆப்ரிக்க இசை கருவிகள் கூட மேடையேர இருபதாம்...
PREVIOUS POST
இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள் - புத்தகம் எந்த நிமிடமும் பேப்பரை விட்டு தாவி குதித்தோடிவிடுமோ என்ற பயம் என் சிறுவயது நண்பன் கோகுலின் ஓவியங்களைப் பார்த்தால் தோன்றும். பத்து வயதிலேயே புராணக் கதைகள், விளையாட்டு காட்சிகள் போன்ற ஓவியங்களை நுணுக்கமான நேர்த்தியுடன் தத்துரூபமாக வரைவான். தேரோட்டி அர்ஜுனன், மானைத் தேடும் ராமன், மைதானத்தில் நடக்கும் கிரிகெட் போட்டியில் பார்வையாளர்களின் ஆரவாரம், ஸ்பைடர்மேன், மாண்ட்ரேக் மாயாவி என விதவிதமாகப் `படம்` போடுவதில் அவனுக்கு ஆர்வம் அதிகம். வண்ணங்களை குறைவாக உபயோகித்தாலும், காட்சிகளில் ஒரு தேஜஸ் காணப்படும். பென்சிலால் அவன் வரைந்த புதுச்சேரி புனித மேரி ஆலயம் பல வருடங்கள் கடந்து இன்றும் துள்ளி்யமாக என் நினைவில் உள்ளது. ஒரு விதத்தில் பார்த்தால் நல்ல கலைக்கு இதுவே அளவுகோல். என் போன்ற அரைகுறை ஞாபகக்காரர்களுக்குக்கூட தேவையான நினைவுமீட்டலை எக்காலத்திலும் கலையால் கொண்டுவர முடியும். (மேலும் பல வண்ணப்படங்களுக்கு படத்தை சொடுக்கவும்) பழைய ஞாபகங்களை கொண்டுவருவதில் ஓவியங்களின் பங்களிப்பு என்ன? அவற்றிலிருந்து பண்டைய...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments