03/17/2010

NEXT POST
சிறுகதை: தண்ணீர் பழைய கதையை ஆங்காங்கே மாற்றி,காலச் சிக்கலைச் சரி செய்து, எழுத்துப்பிழைகளைக் தவிர்த்து மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன். * வெக்கையான அந்த இரவில், வரண்டுபோன தொண்டையில் தண்ணீர் ஜில்லென பட்டபோதுதான் ஆரோக்கியராஜுக்கு வேலைக்குப் போன முதல் தினம் ஞாபகத்திற்கு வந்தது. அந்த வெள்ளிக்கிழமை ஆலயத்திற்கு போகும்வரை அவனுக்கு சத்தமே பிடிக்காது.அல்போன்சுடன் ஒட்டிக்கொண்டு நிற்கும்போதுதான் முதல்தடவையாக ஸ்பீக்கரை தொட்டுப்பார்த்தான்-இன்றும் தன் வாழ்கையை அடக்கிவிடுவதுபோல அந்த கம்பிவளைக்குள் சத்தத்தின் பிரவாகம்.ஒரு கையில் ஸ்பீக்கர் மற்றொரு கையில் பையுடன் ஆலயத்தைவிட்டு போகும்போது இடரிய அதன் பெல்ட் இன்றும் இடருகிறது.ஒவ்வொரு முறையும் பெல்டைத் தவிர்க்க காலை வளைத்து நடந்ததில் அவன் நடையே ஒரு பக்கம் கோணலாகியது. இந்நடையைவிடப் பெரிய பிரச்சனை தண்ணீர் தாகம். கால் வளைந்து கொடுத்ததுபோல நா ஒத்துழைக்கவில்லை.பல கூஜாக்கள் தண்ணீர் குடித்தாலும் தொடர்ந்து பத்து மணிநேரம் பேசும்போதெல்லாம் நா வரண்டுபோகும்.இந்த இரண்டு பிரச்சனைகளையும் சமாளிக்கவே ஆரோக்கியராஜுக்கு வாழ்நாள் சரியாகயிருந்தது.தாகம் தன் வரண்ட கீழ்நிலைமையிலிருந்து விலகி...
PREVIOUS POST
தனிமையின் துணையுடன் - The Twin புத்தக விமர்சனம் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென நம் வீட்டுக்கு வரும் நண்பனைப் போல சில புத்தகங்கள் நம் சூழலை அபகரித்துக்கொள்ளும். வேலை தரும் சோர்வையும் மீறித் தினப்படி காரியங்களை ஒத்திப்போட்டுவிட்டு சில நூறு பக்கங்களுக்குள் புதைந்துகொள்ளச் செய்யும் வல்லமை இப்படிப்பட்ட புத்தகங்களுக்கு அமையும். சக்கர உருளை போல் கதாபாத்திரங்களின் ஏற்றங்களில் ஏறி, தொய்வுகளில் துவண்டு, முடிச்சுகளில் சிக்கி, சிக்கலில் தவித்து ஒரு வாழ்நாளையே கைகளில் அடக்க வைக்கும். இப்படியாக, நாம் பார்த்திராத ஒருவனின் வாழ்க்கையில் நம்மை தொலைக்கும் போது மட்டுமே நாம் படிக்கும் புத்தகம் வெற்றி பெறுகிறது. அப்படி சமீபத்தில் மெய்மறக்க வைத்த புத்தகங்களில் ஒன்றானது `ரெட்டை` (The Twin). இப்புத்தகம் என் வீட்டருகே இருந்த புத்தகக்கடையில் பல ஐரோப்பிய புத்தகங்களுக்கு நடுவே கிடைத்தது. டச்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதைத் தவிர எழுத்தாளரைப் பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை. ஆரம்ப பக்கமே கதைக்குள் என்னை இழுப்பது போல் இருந்தது. மேலும்,...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments