02/04/2010

NEXT POST
இசைவழி சமாதானம் (Parallels and Paradoxes) இது Daniel Barenboim மற்றும் Edward Said எழுதிய Parallels and Paradoxes - Explorations in Music and Society என்ற புத்தகத்தைப் பற்றிய பதிவு. இது இரு கலைஞர்களின் உரையாடல் தொகுப்பு. இருவர்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை, கருத்துவேறுபாடு, ஆர்வம் என உரையாடல் இரு நண்பர்களுக்கிடையே நடப்பது போல் இருக்கிறது. அரசியல், இசை, ஆளுமைகள் என இவர்களின் உரையாடல் தொட்டுச் செல்லாத திசைகளே இல்லை. யார் இவர்கள்? ஒருவர் - சிகாகோ சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா மற்றும் பெர்லின் ஒபரா அமைப்புகளின் இசை ஒருங்கிணைப்பாளரான டேனியல் பாரென்பாய்ம் (Daniel Barenboim) .இவர் 1942ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் பிறந்த யூதர். ரஷ்யாவிலிருந்து வெளியேறி ஐரோப்பாவில் வளர்ந்த டேனியலின் தந்தை, இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பாவில் நடந்த யூத எதிர்ப்பு காரணமாக இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார். மற்றொருவர், எட்வார்ட் செய்ட்(Edward Said). கொலம்பியா பல்கலைக்கழக ஆங்கில பேராசியர். இலக்கியம் மற்றும் சமூகவியல் துறையின் பிரபலமானச்...
PREVIOUS POST
ஏற்கனவே, புனைவின் நிழல் - சிறுகதைத் தொகுதிகள் போன வருடம் படிக்கத் தொடங்கிய இரு சிறுகதை[உயிர்மை பதிப்பகம்] தொகுதிகளைச் சமீபத்தில் தான் படித்து முடித்தேன். புத்தகங்களைப் பல வருடங்களாக படித்து வந்தாலும், கடந்த இரு வருடங்களாகவே ஒரு ஒழுக்கம் கைவந்திருக்கிறது. நாவல்,எவ்வளவு திராபையாக இருந்தாலும், தொடங்கினால் முடிக்காமல் வைப்பதில்லை. கவிதைகள் ஒன்றிரண்டு மேல் ஒரே நேரத்தில் தாங்காது. அதனாலேயே பல கவிதை புத்தகங்களை முடித்த திருப்தி இல்லை. சிறுகதைகள் தொகுப்பு பல மாதங்கள் ஊறுகாய் போல் அவ்வப்போது தொட்டுக்கொள்ளவே விருப்பமாயிருக்கிறது. நேரத்தைப் பொருத்தும் படிக்கும் புத்தகங்கள் மாறுபடும். தொடர்ச்சியாக இரண்டு மணி நேரமிருந்தால் நாவல்/அபுனைவு பக்கமே கை போகும்.போகிறபோக்கில் கண்ணை மேயவிட கவிதை புத்தகத்தை மட்டுமே தேர்ந்தெடுப்பேன். இந்நிலையில், போன வருட தொடக்கத்தில் வாங்கிய மனோஜின் ‘புனைவின் நிழல்’, யுவன் சந்திரசேகரின் ‘ஏற்கனவே’ சிறுகதைகளை முடித்ததும் மீண்டும் படிப்பேன் என சர்வ நிச்சயமாகத் தோன்றியது. தரமானச் சிறுகதைகளை மிக எளிமையான மொழியில் கையாளக்கூடிய செகாவ்,காதரீன் மான்ஸ்பீல்ட், அ.முத்துலிங்கம் வரிசையில் அட்டைப்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments