02/15/2010

NEXT POST
துன்யாசத் - குழந்தைக் காதல், முதல் காதல் வார்த்தை இதழில் வெளியான தமிழாக்கச் சிறுகதை. மூலம்: இந்த சிறுகதை மே தெல்மிசானி (May Telmissany) அவர்கள் எழுதிய 'துன்யாசத்' (1997) என்ற கதையின் தமிழாக்கம். மே தெல்மிசானி கெய்ரோ நகரில் பிறந்து , பிரென்சு இலக்கியம் பயின்று, கனடா பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். பதினைந்து மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட கதை இது. * சாப்பாட்டு மேஜையில் எதிர் எதிரில் நாங்கள் உட்கார்ந்து கொண்டிருந்தோம்.வலது மூலையில் அவன் வரைந்து கொண்டிருக்க நான் மற்றொரு மூலையில் எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென நிமிர்ந்து 'அம்மா! நான் இன்னிக்கு ஒரு அழகான பெண்ணைப் பார்த்தேன்' என மெதுவாகச் சொன்னான்.அவன் சிரிப்பில் ஒரு முதிர்ச்சி தெரிந்தாலும் சற்றே வெட்கப்பட்டான். ஷெபாப்!?நான்கு வயதான ஷெபாபா? சுயநினைவிழந்து பேனா என் கையிலிருந்து நழுவியது.'அவள் பெயர் என்ன?' கண்கள் பளிச்சிட அவனிடம் கேட்டேன். அவன் பதிலேதும் சொல்லவில்லை.மறுபடியும் எழுததொடங்கினாலும் ஒரு இருப்பின்மை அரித்துக் கொண்டிருந்தது. அவன் தன்னையே வரைந்து வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தான்.ஒரு பெரிய...
PREVIOUS POST
இசைவழி எதையும் சாதிக்கலாம்! (Everything is Connected:Power of Music) Everything is Connected: Power of Music - Daniel Borenboim லட்சக்கணக்கில் கட்டுரைகள் எழுதினாலும், இசை பற்றி முழுமையான சித்திரத்தை எழுத்தில் வடிக்க முடியாது. இது இசையின் சிக்கல் அல்ல. இசைக்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு தரும் சிக்கல். சாம்ஸ்கி, க்ளாட் லெவி ஸ்ட்ராஸ் போன்ற அறிஞர்கள் மொழியியல் ஆராய்ச்சியில் இசைக்கூறுகளின் பண்புகளை விளக்கியுள்ளனர். ஆனாலும், மொழியியலின் அடிப்படைகள் தெரியாமல் இக்கட்டுரைகளுக்குள் நம்மால் நுழைய முடியாது. நாகார்ஜுனனின் மொழியாக்கத்தில் இசையும் தொன்மத்துக்கானத் தொடர்பு பற்றிய விளக்கங்கள் உள்ளன. இக்கட்டுரை ரிச்சர்ட் வாக்னரின் ரிங் என்ற இசை-நாடகத்தை உதாரணமாகக் கொண்டு இசைக்கும் தொன்மத்துக்குமானத் தொடர்பை விளக்க முற்படுகிறது. ரிங்கைக் கேட்காமல் இக்கட்டுரையை புரிந்து கொள்வது கடினம். இதனாலேயே, இசைக் கோட்பாடுகளை மொழியின் அடிப்படை வேர்களில் ஆராயும் இக்கட்டுரையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. டேனியல் பாரெம்பாய்ம் எழுதிய Everything is Connected தொகுப்பு இப்பிரச்சனையை வேறொரு கோணத்தில் ஆராய்கிறது. மிக எளிமையான...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments