12/06/2009

NEXT POST
கலையை அனுபவிக்கலாம், ஆராயலாம் ! கலையை அனுபவிக்க சில அடிப்படை விவாதத்தளம் தேவையானபோது விமர்சகர்களால் புது மொழி உருவாக்கப்பட்டது. இசை விமர்சகர்களால் ஹார்மொனிக் (Harmonic), டோனல் (Tonal) போன்ற கோட்பாடுகள் உருவாயின. டோனல் இசை வடிவம் முடிச்சு - முடிச்சு விலகல் என்ற அடிப்படையில் இயங்குகிறது. இசை, ஆதார ஸ்வரத்திற்கு வரும் வரை அந்த முடிச்சு நீடிக்கும். இதை கர்நாடக சங்கீதம் மூலம் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். ஏழு ஸ்வரங்களான - ச, ரி , க, ம, ப, த, நி என பாடத் தொடங்கும்போது. `நி` ஸ்வரத்துடன் நிறுத்தவே முடியாது. பாடல் முடிவு பெறாதது போலிருக்கும். மறுபடியும் `ச` எனப்பாடும்போதுதான் இந்த வரிசை முடிவது போன்ற தோற்றம் வரும். `நி` என்ற ஸ்வரத்தைப் பாடும்போது வருவது முடிச்சு. அடுத்த `ச` பாடும்போது முடிச்சு விலகி, முடிவு ஏற்பட்டது போன்ற உணர்வு தோன்றும். இசையில் இன்பம்,பரிபூரணம் என்ற நிலையை டோனல் வடிவம் இவ்வாறு நிலைநிறுத்தியது. கேட்பவர்களும்...
PREVIOUS POST
ஜான் கேஜ்: மெளனத்தை நிரப்பியவர் நன்றி: அகநாழிகை,டிசம்பர் 2009. ஷோன்பெர்க் (Arnold Schoenberg) இறக்கும் தருவாயில் ஜான் கேஜ் என்ற இசைக்கலைஞர் இசைக்கான புதிய தரிசனத்தை முன் வைத்தார். இதைக் கோட்பாட்டொறுத்தல் என வகைப்படுத்திய இசை விமர்சகர்கள், இசையை பழைய கோட்பாடுகளிலிருந்து துண்டுபடுத்தியதாக ஜான்கேஜின் கொள்கையை விவரித்தனர். ஜான் கேஜைப் பொருத்த வரை இசையில் சுரங்களுக்கிடையே இருக்கும் மெளனத்தின் வெளிப்பாடு பிரம்மாண்டமானது. 1930-களின் இறுதிவரை சத்தத்தையே பிரதான இசை வடிவாகக் கொண்டிருந்த இவர் 1950-களில் மெளனத்தை இசையின் உச்சகட்ட வெளிப்பாடாகக் கொண்டார். இவருள் நிகழ்ந்த மாற்றமே இதற்கு முக்கிய காரணம். ஜென் புத்த மதத்தை தழுவிய பின்னர் மெளனத்தின் அர்த்தத்தை மிக விரிவாக ஆராயத் தொடங்கினார்.நாம் கண்டுகொள்ளாத வரை நம்மைத் தொந்தரவு செய்யும் சத்தம், கேட்கத்தொடங்கும்போது அற்புதமாக மாறி நம் செவிகளுக்கு இன்பம் சேர்க்கிறது என்றார். ஜான் கேஜ், தன் வாழ்நாள் முழுவதும் இசையில் மெளனத்தின் அர்த்ததைத் தேடிக்கொண்டிருந்தார். இசை நிரப்பாமல் விடும் இடங்களில் அழகிய மெளனங்கள்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments