09/18/2009

NEXT POST
நூறாவது பதிவு, அறிவிப்பு உயரம் தாண்டும் வீரனைப் போல் மூன்று மாதங்களில் கிடு கிடுவென எழுபது பதிவுகள் வார்த்தையின் விளிம்பில் கொட்டிவிட்டேன். அடுத்த இருபதை நெருங்க நிறைய நாட்கள் சென்றுவிட்டன. கடந்த ஐந்து மாதங்களில் நூறு பதிவுகள்.அவனவன் முன்னூறு,நானூறு என பதிவுகள் போட இதுவரை வந்ததற்கே உஸ் அப்பா என்றாகிவிட்டது. சொல்வனம்,தமிழ்ஹிந்து,திண்ணை என நல்லவர்கள் சிலர் தொடர்ந்து பிரசுரித்து வந்ததால் இங்கே எழுதுவது குறைந்தது. சில செய்திகள் - இந்த பதிவுகளில் 20% சுய விளம்பரங்கள், இங்க பாரு, அங்க படி எனும் ரகங்கள்.இசைப் பற்றி பெரும்பாலும் எழுதியிருந்தாலும், பல பழைய குறிப்புகளை ஊதி பெரிதுபடுத்தியவை. கருணாமிர்த சாகரம் பற்றிய பதிவுகள் படிக்கப் படிக்க குறித்துவைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதுதான் தட்டச்சு செய்து வருகிறேன். இது வரை வந்த பதிவுகளுக்கு மொத்தம் 60 பின்னூட்டங்கள் வந்துள்ளன. அதில் 10 சதவிகிதம் `நன்றி, வாங்க` என நான் கூப்பாடு போட்டவையே. இவ்வளவு பாப்புலாரிட்டி ஆகாது என்பதால்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments