07/26/2009

NEXT POST
பால்டிமோர் கனவுகள் - 1 ஆச்சு. இருந்த கடைசி பெட்டியையும் ஷிப்மெண்டுக்கு அனுப்பியாகிவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்தியா வந்து சேர்ந்துவிடும். பால்டிமோரிலேயே பதினைந்து வருடங்கள் கழித்து, இரு நாட்களில் இந்தியாவுக்கு பறக்க எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது. அதிகாலை சோம்பல் முறித்து எழுந்து, மாலை சட்டென செய்த முடிவுகிடையாது.திவ்யா, ‘கண்டிப்பா போகணும்.இங்க பயமா இருக்கு.தீபா காலேஜுக்கு போகலாம்னு சொன்னீங்களே’ என விசும்பினாள். பெண்ணுக்கு பதினாறு வயதானவுடன் அம்மா மனது விழித்துக்கொள்கிறது. தீபாவுக்கு அவ்வளவு விருப்பமில்லைதான் ‘ஐ’ல் கம் பேக் ஃபார் எகனாமிக்ஸ் ஸ்கூல் இன் சிகாகோ. அங்க என்னால கம்ப்யூட்டர் எல்லாம் படிக்க முடியாது.’ ஏதோ அதைப் படிக்கவைக்கவே அம்மா இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டு போவதாய் அவளுக்கு எண்ணம். ஆனாலும் அம்மாவுக்கு டேட்டிங், பாய்ஃபிரண்ட் பற்றிய பயம் இருக்குமென அவளுக்கும் தெரியும். போன பாட் லக் டின்னரில் கூட அஸ்வினின் அம்மாவிடம் தன் அம்மா தூண்டில் போட்டு விஷாலைப் பற்றிக் கேட்டதற்கு, இரண்டு நாள் சண்டை பிடித்திருக்கிறாள். அவரவர்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments