07/09/2009

NEXT POST
எழுத்து - ஜெயமோகன் - தொடர் அடுத்த சில வாரங்களுக்கு ஜெயமோகனின் புத்தகங்களைப் பற்றி எழுதலாமென்றிருக்கிறேன். ஜெயமோகன் பன்முக ரசனை கொண்டவர். அது அவர் எழுத்திலும் தெரிவதுதான் ஆச்சர்யம். பெரிய கதை சொல்லி, சாகாத கதாப்பாத்திரங்களை படைத்தவர், Wilde போல பொன்மொழிகளை உதிர்த்தவர் , Chesterton போல தத்துவத்தை நுழைத்தவர் என பொய் சொல்ல முடியாது. ஆரம்ப நாட்களில் ஜெயமோகன் கதைகளை படித்து தமிழ் இலக்கியத்தைப் படிக்கத் தொடங்கினாலும், இப்போதெல்லாம் கை அவர் கதைகளைவிட திறனாய்வுகளையும், விமர்சனங்களை மட்டுமே எடுக்கிறது. அவர் பல சிறுகதைகள் படிக்க சுவாரசியமாக இருந்தாலும், பிற்பாடு அசைபோடும் சமாசாரங்கள் கம்மியாகவே இருக்கும். பொதுவாக பிரச்சார எழுத்துகளும்,புனைவு சாத்திய சாதனைகள் (சுஜாதா) மட்டுமே நம் நினைவில் நிற்கும். இன்றும் வலைபதிவர்கள் மட்டுமல்லாமல், சமகால எழுத்தாளர்களுக்கும் ஆதர்சம் சுஜாதாதான். அவர் மேம்போக்காகக் கூறிச் சென்ற வாக்கியங்களை, வேதமாகக் கொண்டவர்கள் நாம். இப்போதும் என்னால் அவர் எழுதிய பல போதனைகளை (க்யூவில் நிற்கும்போது புத்தகம் எடுத்துச் செல்லுங்கள்!) நினைவு...
PREVIOUS POST
முதல் பத்தி - ஒரு புளியமரத்தின் கதை சமீபத்தில் என் நண்பனுக்கு பிடித்த பைத்தியம் - புத்தக அலமாரிக்கருகே போகும்போதெல்லாம் ஏதேனும் ஒரு புத்தகத்தின் முதல்பக்கத்தைப் படித்து மூடி விடுவானாம். அந்த புத்தகத்தை ஏன் தனக்கு பிடித்தது, அது ஏன் வெற்றி/தோல்வி அடைந்தது என நாள் முழுதும் அலசிக் கொண்டிருப்பானாம். இந்த வேலையெல்லாம் நமக்கெதுக்கு என சில நாட்கள் சும்மா இருந்தேன். ஆனால் அந்த பூதம் நேற்று என்னை பிடித்துவிட்டது. நேற்று `ஒரு புளியமரத்தின் கதை` புத்தகத்தை அடுக்கி வைக்கும்போது, சரி என் நண்பனின் பிளானை செய்து பார்க்கலாமே என முதல் பத்தியை படித்தேன். நாள் முழுதும் இந்த ஆரம்ப வரிகளே ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தது. `முச்சந்தியில் நின்றுகொண்டிருந்தது புளியமரம். முன்னால் சிமிண்டு ரஸ்தா.இந்த ரஸ்தா தென் திசையில் பன்னிரண்டு மைல் சென்றதும், குமரித் துறையில் நீராட இறங்கிவிடுகிறது. வடதிசையில் திருவனந்தபுரம் என்ன, பம்பாய் என்ன, இமயம்வரை கூட விரிகிறது. அதற்கு அப்பாலும் விரிகிறது என்றும் சொல்லலாம். மனிதனின் காலடிச்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments