07/22/2009

PREVIOUS POST
சிபேலியஸ் - இசை - மகா யுத்தத்திற்கு முன்னும் பின்னும் சிபேலியஸ் - இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் - நிறைவுப் பகுதி நன்றி: சொல்வனம் `தங்களைப் புரட்சியாளர்கள் என அறிவித்தவர்கள் உண்மையிலேயே பழமைவாதிகள், தங்களைப் பழமைவாதிகளாகக் கண்டவர்களின் படைப்புகளே புரட்சிகரமாக உள்ளன`. பொதுவாக சிம்பொனி வடிவங்களில் நான்கு பகுதிகள் இருக்கும்.பல சிம்பொனிகளின் கரு இந்த பகுதிகளில் ஒளிந்திருக்கும். 1. அல்லெக்ரோ (Allegro) 2. அடாஜியோ (மிக மெதுவான Adagio) 3. செர்ஷோ (வேகமான Sherzo) 4. அல்லெக்ரோ (மெதுவானது) நடு இரண்டு பகுதிகளில் மட்டுமே சில மாற்றங்களை இசையமைப்பாளர்கள் செய்து வந்தனர். ஆனால், சிபேலியஸோ கடைசிப் பகுதியை வேகவேகமாகத் தொடங்கி, சீரான ஒரு ராணுவ அணிவகுப்பு போலத் தொடர்ந்து, கடைசியில் பிரம்மாண்டமாக முடித்திருந்தார். இந்த மாற்றத்தை மாஹ்லர் போன்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `சிம்பொனி என்பது மாற்றங்களே இல்லாத ஒரு உலகம் போன்றது, எல்லாவற்றையும் அது தன்னுள் இழுக்க வேண்டுமே தவிர அதிலிருந்து புது அர்த்தங்களை வெளிக்கொணர ஒன்றுமேயில்லை` - என வாதிட்டார்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments