07/02/2009

NEXT POST
Vital Statistics - 32 trivial questions. இந்த தொடர் கவர்ச்சியில் என்னையும் அழைத்த பாஸ்டன் பாலாஜிக்கு நன்றி. மரத்தடி,திண்ணை என ஐந்து வருடங்களாக அவ்வப்போது எழுதிவந்தாலும்,இணையத்தில் மிகச் சமீபத்தில்தான் எழுத ஆரம்பித்துள்ளேன். பாலாஜி நான் எழுதிய கதையைப் படித்து தாராள வார்த்தைகளோடு பாராட்டியிருந்தார். என் கதையின் முதல் விமர்சனமும் அதுவே.அவருக்கு நன்றி. //இவரைக் குறித்து அதிகம் தெரியாது.// என என்னை அறிமுகம் செய்ததால் என்னைப் பற்றிச் சில தகவல்கள். ரா.கிரிதரன், வசிப்பது - லண்டனில், தற்சமயம் BBC மென்பொருள் துறையில் பணி. வெளியே சொல்லிக் கொள்ளக்கூடியது கொஞ்சும் iPlayer ஸ்டிரீமிங்கில் என் சிறு பங்கு மட்டுமே. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு? பாலாஜி டைமிங் கார்டூன்கள் தவிர, அவரது குத்திக்கல் தெரு ரசித்துப் படித்தேன். உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? யார் சொல்லியும் கேட்காமல், தடாலடியாக என் தாத்தா வைத்த பெயர். உருவத்தில் தவிர மலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments