07/01/2009

NEXT POST
நவீன பத்மவியூகம் உரையாடல்:சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக நடத்தப்படும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது. மார்கழி வந்து இரு தினங்களே கழிந்திருந்தன. காலை ஆறு மணி. எங்கிருந்தோ வந்த வண்டுகள் என் ஜன்னலில் முட்டிக் கொண்டிருந்தன. சில சமயம் இடித்து கீழே விழுவதுபோல் விழும்போது போர் விமானங்களாய் திடும்மென வெளிக் கிளம்பின. என்னிடமிருந்து எது வேண்டுமெனத் தெரியவில்லை. ஜன்னல் வழி தெரிந்த உயரமான யூக்கலிப்டஸ் மரத்தின் இலைகளில் காலை சிவப்புப் படரத் தொடங்கியது. இந்த மாத ஸ்பெஷலாக அடித்த காற்றில், மரங்கள் சிலிர்த்து எழுந்து மீண்டும் தங்கள் கனவின் சொகுசில் புகுந்து கொண்டன. அறுபத்து ஐந்து வயதெல்லாம் ஒரு வயதா என பிறர் சொல்லிக் கேட்கும்போது ஆசுவாசப்படும் மனது, இந்த காப்பகத்தினுள் வருபோரைப் பார்த்தால் தொய்ந்துதான் போகிறது. நான் தங்கியிருக்கும் வீடு மூன்று மாடி உலகம். இந்த வீட்டின் பின்பக்கத்தில் முன்னொரு காலத்தில் சாலை இருந்திருக்கவேண்டும். முன்வாசல் சாலை கட்டிடம் கட்டத்தெரியாதவர்கள் கட்டியது போல்...
PREVIOUS POST
Vital Statistics - 32 trivial questions. இந்த தொடர் கவர்ச்சியில் என்னையும் அழைத்த பாஸ்டன் பாலாஜிக்கு நன்றி. மரத்தடி,திண்ணை என ஐந்து வருடங்களாக அவ்வப்போது எழுதிவந்தாலும்,இணையத்தில் மிகச் சமீபத்தில்தான் எழுத ஆரம்பித்துள்ளேன். பாலாஜி நான் எழுதிய கதையைப் படித்து தாராள வார்த்தைகளோடு பாராட்டியிருந்தார். என் கதையின் முதல் விமர்சனமும் அதுவே.அவருக்கு நன்றி. //இவரைக் குறித்து அதிகம் தெரியாது.// என என்னை அறிமுகம் செய்ததால் என்னைப் பற்றிச் சில தகவல்கள். ரா.கிரிதரன், வசிப்பது - லண்டனில், தற்சமயம் BBC மென்பொருள் துறையில் பணி. வெளியே சொல்லிக் கொள்ளக்கூடியது கொஞ்சும் iPlayer ஸ்டிரீமிங்கில் என் சிறு பங்கு மட்டுமே. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு? பாலாஜி டைமிங் கார்டூன்கள் தவிர, அவரது குத்திக்கல் தெரு ரசித்துப் படித்தேன். உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? யார் சொல்லியும் கேட்காமல், தடாலடியாக என் தாத்தா வைத்த பெயர். உருவத்தில் தவிர மலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments