06/08/2009

NEXT POST
கவிதை - மேய்ந்ததில் பிடித்தது ரசித்த சில கவிதைகள் - நாகார்ஜுனனின் ஸில்வியா பிளாத் கவிதைகள் தமிழாக்கத்தில் மொழிக் கூர்மையின் அவசியத்தை மற்றொருமுறை நிலைநாட்டுகிறது. போகிற போக்கில் உதறிச் செல்லும் உவமைகளை உடையது ஸில்வியா பிளாத்தின் கவிதை. அந்நிலையில் கவிதையின் மெளனம், வார்த்தைகளுக்குள் இருக்கும் இடைவெளியை கூட்டிக் குறைக்கிறது. இதுவே கவிதையின் visual impact என்பதற்கு வழிவகுக்கிறது. தற்கொலை, சாவு குறித்த வெளிப்பாடுகள் ஒரு கவிதாயினி தன் வாழ்நாள் முழுவதும் வார்த்தைகளில் வடித்திருக்கிறார். தன் கவிதைகளை பின்பற்றியே அந்த வெளிப்பாடுகளில் சந்தித்திருக்கிறார், தன் தற்கொலையில். சர்வோத்தமனின் பக்கங்களிலிருந்து - கவிஞனின் செயலிழந்த அந்த நா - தேவதேவன் ஏற்புரை. கவிஞனுக்கும் வாழ்வுக்குமான தொடர்பை மதிப்பீடு செய்கிறது. ஸில்வியா பிளாத்தே அதற்கு ஒரு பதம். மெட்ரோ பட்டாம்பூச்சி - இது கே.ஆர்.மணியின் கவிதைத் தொகுப்பு. புதுக்கவிதை - நகர வாழ்க்கைக்கு ஏற்ற வடிவமே.ந(ர)கரத்தின் மின்னல் மாற்றங்கள், கால் சென்டர் அவசரங்களுக்கு வெண்பாவைத் தேடி ஓடமுடியாது. சடாரென முடியும் சில...
PREVIOUS POST
சொல் வளம் - தமிழ் நார்மன் லூயிஸ் தமிழின் Word Power Made Easy புத்தகம் தேவநேயப்பாவாணர் எழுதிய 'சொல்வளம்'. இந்நூலில் பல அறிய கலை சொற்களை , பழந்தமிழ் இலக்க்கியத்திலிருந்தும், அந்த கால சொற்பிரயோகங்களிலிருந்தும் எடுத்தாய்ந்து அற்புதமான 150 பக்கங்களில் தொகுத்துள்ளார். ஒவ்வொரு சொற்களின் வேர், அதன் பிரயோகம் என உதிரி செய்திகளையும் அள்ளித் தெளித்திருக்கிறார். கலை சொற்களின் தொடர்புகள், வேர்களை வைத்தே எழுதப்பட்ட நூல் ஜெயமோகனின் கொற்றவை. அதிலும் குறிப்பாக முதல் பாகத்தில் வரும் சொற்களின் வேர்களும், அவற்றின் தன்மைகளும் மிகப் பொருத்தமாகவே இருக்கும். தேவ.பாவாணர் எழுதிய நூலில் என்னைக் கவர்ந்த இன்றும் புழக்கத்திலிருக்கும் சில சொற்கள் பேட்டை - சந்தை கூடும் ஊர். சம்பளம் - சம்பு + அளம். (சம்பா + உப்பு= உப்பையே ஊதியமாகக் கொடுத்தது.) இடாகினி - இடுபிணந்தின்னும் பெண் பேய். இடங்கர் - Crocodile (இது முதலை கிடையாது. எப்படி??) பனுவல் - பிரபந்த நூல் வகை. (தேவாரம் =...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments