06/14/2009

NEXT POST
தேவதைகள் காணாமல் போயின - சிறுகதை. நன்றி திண்ணை நான் வந்து சேர்ந்த அன்று தேவதைகள் நிரந்தரமாக காணாமல் போயிருந்தன. தேனைப் போன்றதொரு அடர்த்தியான வெளிச்சம் ஜன்னல் வழியெ ஊடுருவியது. மதிய நேர சோம்பல் உள்புகுமுன் ஜன்னலை மூடினேன். சரியாக இரண்டு நாட்களாக எங்குமே செல்லாமல் அஜந்தா விடுதியில் கடலைப் பார்த்த அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன். சோம்பல் பல காரணங்களில் ஒன்றுதான். பல வருடங்களுக்கு முன்னர் மாரி மழை பெய்த மாதங்களில் இதே அறையில் தங்கியுள்ளேன். நூறில் பாதி, இருப்பதோ சோக மீதி எனப் பாடத்தோன்றும் வயது. மறுபடி முட்டைக் கரு நிறத்திலிருந்த திரைச் சீலையை விலக்கி கடலைப் பார்க்கிறேன். ஜெயந்திக்குப் பிடிக்காத அதே முட்டை கரு திரை. ஏனோ போன தடவைப் போல மாற்றச் சொல்லவில்லை. ஜீரணமாகாத உணவை தள்ள முயற்சிப்பதுபோன்ற கடலின் முயற்சி ஒவ்வொறு முறையும் அலையென தோற்கும் காட்சி வியப்பானதே. எதைஎதையோ விழுங்குவதும், பின்னர் எதுவுமே தெரியாதுபோல் கிடப்பதும் இதற்கு வாடிக்கையாகிவிட்டது. அப்படி என்னதான்...
PREVIOUS POST
இலைகளை வியக்கும் மரம் - சில வரிகளில் புத்தக விமர்சனம் எல்லா எழுத்தாளர்களிடமும் ஏதேனும் ஒன்றை எதிர்பார்த்தே படிக்கிறேன். அது கிடைக்காத போது அந்த புத்தகத்தையே தொட மாட்டேன். பல சமயம் தொலைத்தும் விடுவேன். அப்படி தொலைத்த ஒன்றுதான் எஸ்.ராமகிருஷ்ணனின் `இலைகளை வியக்கும் மரம்`. இது எஸ்.ராவின் எத்தனாவது கட்டுரை புத்தகம் என்பது அவருக்கே மறந்திருக்கும். இன்னும் ஒரு கட்டுரைத் தொகுப்பா என நினைத்து படிக்காமல் தள்ளிப்போட்டேன். இரு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த புத்தகத்தை வாங்க வேண்டிய நிலை. அவர் எழுதிக்கொண்டிருக்கும் இணைய கட்டுரைகள், அரவோன் நாடகம், இந்த புத்தகத்திற்குப் பிறகு வெளியான மேலும் சில கட்டுரைத் தொகுப்புகளை படித்தபோதும், இந்த புத்தகம் நல்ல படிப்பு அனுபவத்தை தந்தது. காணும் மனிதர்களிடமும், பயணங்களின் கதைகளுமே இந்த தொகுப்பு. கதாவிலாசம் தெரிந்தவர்களுக்கு எஸ்.ராவின் பயண அனுபவங்கள் புதிதல்ல. கிட்டத்தட்ட ஒரு யாத்ரிகன் போல பல ஊர்களுக்கும் சென்று அதன் அனுபவங்களை நம் ஞாபகத்திலுள்ள அனுபவமாக மாற்றக்கூடிய எழுத்து.நகுலனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதினால், அவர் வார்த்தைகளிலேயே புத்தக...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments