06/28/2009

NEXT POST
புலன்வெளி ஒலிகள் - உயிரோடை சிறுகதைப் போட்டி உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது சூரியன் மறைந்தபிறகு அது நனைத்த இடங்களிலெல்லாம் நியான் விளக்குகளும் மங்கலான தெரு விளக்குகளும் ஆக்கிரமித்திருந்தன. தனியாக நடந்து வரும்போது என் காலடி சத்தத்தின் இடையே உருவான நிசப்தம் பயத்தை உண்டாக்கியது. இப்போது பைத்தியங்கள்,குடிகாரர்கள் இவர்களை மட்டுமே இத்தெரு எதிர்ப்பார்த்திருக்கும். சமயத்தில் என்னைப்போல் வீடுள்ளவர்களுக்கும் அனுமதியுண்டு. சில மாதங்களுக்கு முன் இதே இடத்தில் - `உங்களுக்கு நாலு தலை` - ஜெயந்தி நீண்ட நேர மெளனத்தை நிரப்பினாள். அரைமணி நேரமாய் எதுவும் பேசாமல் நடந்துகொண்டிருந்தோம். என் மனைவி சுட்டிக்காட்டிய இடத்தில் இன்னும் நான்கு விளக்குகள் அசோக ஸ்தூபி போல நின்றிருந்தது. அதன் அடியில் நடப்போருக்கு எப்போதுமே நான்கு தலை தான். நான்கு விளக்கடியில் அவள் கண்களில் ஆர்வமினுமினுப்பும், என் கண்களில் எரிச்சல் கலந்த விட்டேரித்தனமும் தளும்பியிருந்தது. அவள் அணிந்திருந்த புடவை இப்போது நினைத்துப் பார்த்தால் பாந்தமாக இருக்கிறது. அன்றுபோல் இப்போதும் மெளனத்தை மட்டும் துணையென நடந்து வீடு...
PREVIOUS POST
நவீன பத்மவியூகம் உரையாடல்:சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக நடத்தப்படும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது. மார்கழி வந்து இரு தினங்களே கழிந்திருந்தன. காலை ஆறு மணி. எங்கிருந்தோ வந்த வண்டுகள் என் ஜன்னலில் முட்டிக் கொண்டிருந்தன. சில சமயம் இடித்து கீழே விழுவதுபோல் விழும்போது போர் விமானங்களாய் திடும்மென வெளிக் கிளம்பின. என்னிடமிருந்து எது வேண்டுமெனத் தெரியவில்லை. ஜன்னல் வழி தெரிந்த உயரமான யூக்கலிப்டஸ் மரத்தின் இலைகளில் காலை சிவப்புப் படரத் தொடங்கியது. இந்த மாத ஸ்பெஷலாக அடித்த காற்றில், மரங்கள் சிலிர்த்து எழுந்து மீண்டும் தங்கள் கனவின் சொகுசில் புகுந்து கொண்டன. அறுபத்து ஐந்து வயதெல்லாம் ஒரு வயதா என பிறர் சொல்லிக் கேட்கும்போது ஆசுவாசப்படும் மனது, இந்த காப்பகத்தினுள் வருபோரைப் பார்த்தால் தொய்ந்துதான் போகிறது. நான் தங்கியிருக்கும் வீடு மூன்று மாடி உலகம். இந்த வீட்டின் பின்பக்கத்தில் முன்னொரு காலத்தில் சாலை இருந்திருக்கவேண்டும். முன்வாசல் சாலை கட்டிடம் கட்டத்தெரியாதவர்கள் கட்டியது போல்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments