1974 டிசெம்பர் - வியன்னா சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா. நான் முதன்முதலாய் உருவாக்கிய அடோனலிடி க்ரூப். ஷோன்பெர்க்,ஸ்ட்ராவின்ஸ்கி ஆகியோர் வழியில் தொடங்கப்பட்ட குழு.பெரிய மேடைக்கு நடுவே நின்றுகொண்டு -
"நண்பர்களே! பல நூறு வருடங்களாக பாரம்பரிய இசையில் குடிகொண்ட நாதத்தின் வேரை இன்று நகர்த்தியுள்ளோம். இதற்காக லயத்தில் குறைபாடு ஏற்படுமென்ற வாதத்தை தகர்க்க முயற்சிப்போம். இங்கு கூடியிருக்கும் இசை ஆர்வலர்களே, ஒலி அமைப்பாளர்களே மற்றும் புதாபெஸ்ட் ஆர்கெஸ்ட்ரா நண்பர்களே - இதுவரை இரண்டு உலக யுத்தங்களை நாம் சந்தித்துள்ளோம். இசை உலகிலும் மூன்று விதமான புரட்சிகள் அரங்கேறியுள்ளன.ஆன்மீக இசையை மீறி மக்கள் ரசிக்க வந்த இசை முதல் இன்று காலத்தின் கட்டாயத்தில் பாரம்பரிய இசை புரட்சியால் சிறிதளவே மாற்றம் கண்டுள்ளது.பண்களின் ஒத்திசைவிலிருந்த ஒழுக்கத்தையும் அவற்றின் வரிசைமீதிருந்த விரக்தியே ஷோன்பெர்கை இந்த பெரிய மாற்றத்திற்கு தள்ளியது. இதற்கான முழு காரணத்தை அவர் தெளிவுபடுத்தவில்லை. அவரின் இசை கோப்புகளிலிருந்து நம்மால் சில அனுமானங்களை வரையறுக்கமுடியும்"
நான் பேசும்போதே கராஜன் தன்னுடன் வந்தவருடன் பேசிக்கொண்டே முன் நகர்ந்து ஈடுபாடோடு கேட்க ஆரம்பித்தார்.
"காலத்தின் பன்முனை தாக்குதல் இதற்கு ஒரு காரணம்.அவர் வார்த்தையிலே இதற்கு விடை காண முடியும்.தன்னுள் ஏற்பட்ட இருப்பின்மை குறைந்ததாகவும், இதை ஒரு கட்டுப்பாடான முயற்சியில் செய்ததாக பதிவு செய்திருக்கிறார்.அந்த காலத்திலிருந்த கட்டுப்பாடான அலவுகோளால் அடோனலிடிக்கு எதிர்பு வந்ததை நாம் உணர்ந்துகொள்ள முடியும். இந்த வார்த்தையுடன் அவருக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் நம் காலத்தின் பின்நவீன பாணியை இவ்வகை இசை கோப்புகள் சரிவர பதிவு செய்யும் என்பது உண்மை.பண்களுக்குள்ள ஒற்றுமையை செஸ் ஆட்டம்போல் கலைத்துப் பார்த்தாலும், லயத்தின் ஒத்திசைவிற்கு பாகுபாடு ஏற்படாது.
தண்ணீரை பருகியபின் மீண்டும் தொடர்ந்தார் -"இந்த உலகத்தின் இயல்பை இயற்கையாக விவரிப்பதில் அடோனலிடி முதல் முயற்சியாக கருதுவோம்.மோசார்ட்,பீத்தோவேன்,புச்சினி,பிராஹம்ஸ் போன்றோர் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும் அவர்களின் பிரெத்யேக சிம்பொனியில் காலத்தின் இவ்விவரணைகள், வாழ்க்கை முறை இன்னபிற செய்திகளை சேகரிப்பது கடினம். 1908-இலேயே ரொமாண்டிஸிசம் முடிவிற்கு வந்துவிட்டது. நம் வாழ்வுமுறையின் கண்ணாடியாக இதைக் காண்கிறேன்"
கூட்டம் முடிந்ததும் நான் தங்கியிருந்த அறைக்கு ஹோல்மேன் என்ற பப்ளிசிடி மேளாளர் வந்திருந்தார்.இங்கு இசைத்துறையில் இசையைத் தவிர பலவித இயக்கங்கள் உள்ளன.கண்ணுக்குத் தெரியாமல் இயங்கும் இவற்றின் போக்கே இசை கோப்புகளின் வெற்றியை தீர்மானிக்கும்.கடந்த நூறு வருடங்களாகவே தொழிலாக மாறிவிட்ட சால்ஸ்பெர்க் இசை திருவிழா மொஸார்ட்டை விற்கும் நாட்களாகவே எனக்குத் தோன்றும்.இந்த முரண்பாடே என் வாழ்வு. இசை உலகின் ஜாம்பவான்களுக்கு இத்தொழிலின் முக்கிய கட்டங்கள் தெரியும்.அதற்கான சமரசத்துடன் தான் இயங்க முடியும்.
"வாங்க ஹோல்மேன்.உங்களை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.இன்றுதான் சந்திக்கிறேன்."
"வணக்கம் அனந்தன்.உங்கள் உரை அற்புதமாக இருந்தது.கூட்டத்திற்கு வரும் வரை குழப்பத்திலேயே வந்தேன்.இப்போது தெளிவாக உள்ளேன்.அடோனலிடியின் வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியை என்னிடம் விடுங்கள்.ஜமாய்த்துவிடலாம்."
"முதலில் ஒரு பைலட் செய்தாக வேண்டும்.ஒரு இசையமைப்பாளர்,கோர்ப்பாளர்,ஆர்க்கெஸ்ட்ரா- பல அரங்குகளின் ஒத்துழைப்பு.ஒவ்வொறு சிம்பொனிக்கும் சில வடிவ யுத்திகள் செய்ய வேண்டும்"
இதுதான் எனக்குப் பிடிக்காத இடம். இசை பப்ளிசிடி என்பது ஒரு வியாபாரி மட்டுமே.அந்த எல்லையை சில வருடங்களாகவே பப்ளிஸிஸ்டுகள் விஸ்தாரப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.இசை அரங்கு மேலாளர்களும் இந்த விளையாட்டில் பங்கு பெறுவதால், என் போன்ற இசை ஒருங்கிணைப்பாளர்களின் வேலை இயந்திரமயமாக்கப்பட்டு வந்துள்ளது.இசையின் உன்னதத்திற்காக இசை என்ற எண்ணம் கரைந்து போய் பல ஆண்டுகளாகிவிட்டது.
"உங்களை யார் அனுப்பியிருப்பார்கள் என்று தெரியும். உங்கள் வியாபார நுணுக்கங்களும் தெரியும். என் ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களின் சம்பளத்தைப் பற்றி நான் கூறவேண்டும்.மணிக்கு எட்டு டாலர் மற்றும் பயிற்சி நாட்களில் கூடுதல் ஐந்து டாலர்."
எரிமலையைப் பார்ப்பதுபோல இருந்தது அவர் பார்வை.
'நீங்கள், நான் சொல்வதை கவனமாக கேட்க வேண்டும்' - பீடிகையுடன் ஆரம்பித்தேன்.
Recent Comments