சுஜாதா புகழ் 'one liners', நாவல் அல்லது கதை எழுதுவதற்கான நல்ல தொடக்கம் என்றெண்ணுகிறேன். கண்ணென்ப வாழும் எழுத்தாளர்களுக்கு கடமையாக இந்த plot வகையறாக்கள் பிடிபடவேண்டியது முக்கியமாகிறது. இதை எழுதத் தொடங்குமுன் இவ்வரிகளை யோசித்திருக்கலாம்.
வார்த்தைகள் வழுவும்போது ஓர் நேர்காணலின் தொடர்ச்சி
இத்தருணத்தில் மழை பெய்யவேண்டும்.
வானம் இருளாகி ஒரு ரம்மியத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.நான் சொல்லும் சில விஷயங்களை அந்த சத்தமாவது அணைக்கக்கூடும்.என்னால் இன்னுமொரு இரவை சந்திக்கமுடியுமென தோன்றவில்லை.மாமாவிடம் இந்த மரண செய்தியை கூறும்வரையிலாவது நடுக்கம் தெரியக்கூடாது.நான் அனந்தன் மாமாவின் அக்கா மகன். பாரிஸைப் பிளக்கும் சென் நதியின் இடது கரையில் துவங்கிய உறவு. அவ்வளவு எளிதாக பிரிக்க இயலாதென மாமா கூறிய உறவு.
நான் பிரான்ஸில் ஸொர்போனில் ஓவியம் பயின்றுவந்தேன்.என் பெற்றோர் விபத்தில் இறக்காமல் இருந்திருந்திருந்தால் பிரான்சு மண்ணில் முழு உருவோடு மாமா என்றொருவர் இருப்பது தெரியாமல் இருந்திருப்பேன். உறவுகளைபோல சில உணர்வுகளும் தெரியாமலே இருந்திருக்கும். இப்போதோ மாமாவை பார்த்ததும் அழ வேண்டும். இயற்கையாக வராது.ஒப்பாரி வைக்க முடியும்-இந்தியாவில் என்னைப்போல இருப்பவர்கள் இயல்பாக செய்யும் வேலை. இந்த status quo ஒரு வரம். பிரான்ஸில் கையில் XY எழுதியிருப்பேன்.இந்த சரித்திரத்தையும் நீங்கள் கேட்க வேண்டும். எனக்கு குறைவாக இருப்பதே இந்த நேரம்தான்.இந்தக் கதையை சிறிது நேரத்திற்கு பிறகு வைத்துக்கொள்ளலாமா?
ஆம், இந்நேரத்தில் செயல் மிகவும் முக்கியம். மாமாவின் மகள் சவக்கிடங்கில் கிடக்க நான் கையைக் கட்டிக்கொண்டு நிற்க முடியுமா? முதலில் விஷயத்தை பொறுமையாக மாமாவிடம் சொல்ல வேண்டும். உறவுச் சங்கிலி அறுபடும் இருக்கத்தை உணர்ந்தவள் நான்.
.வண்டியை சீரான வேகத்தில் ரியூ பால் வீதிக்குள் செலுத்தினேன். மாமாவின் வீடு அத்தெருவின் கடைசி தெருவிளக்கினருகில் மூலையில் முட்டி நின்றுகொண்டிருந்தது.அனேகமாக பாண்டிச்சேரியின் எல்லை வீடு இதுவாகத்தானிருக்க வேண்டும்.கடலின் ஓசைபட ஒதுக்கமாக இருக்கும் அந்த வீட்டிற்கு தினம் வரும்போதெல்லாம் இதையே நினைத்துக்கொள்வேன். அனந்தன் மாமாவும் ஒதுங்கி வாழ்பவர்தான்.நினைத்த நேரத்தில் கடலில் சென்று கரைய முடிகின்ற இயல்பு உண்டு.அதிஷ்டக்காரர்.
வழக்கம்போல தன் படிக்கும் அறையின் நாற்காலியருகே நின்றுகொண்டு ஜன்னல் வழியே கடலைவெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.நாற்காலியில் அவர் உட்கார்ந்த நான் பார்த்ததில்லை.விவரத்தை பதட்டத்துடன் நான் கூற இயல்பாகவே கேட்டுக்கொண்டார்.எதிர்ப்பார்த்திருப்பார். நான் மாமாவின் தலையை கோதியபடி நின்றுகொண்டிருந்தேன்.நீங்கள் அந்த அறையின் கதவிலிருந்து பார்த்திருந்தால் இரண்டு உருவங்கள் தலையோடு தலை முட்டிக்கொண்டு நிற்கும் காட்சியைப் பார்த்திருக்க முடியும். ஒரே உயரமிருந்தாலும் நான் வளைந்துக் கொண்டு மாமாவின் தலையை கோதிக்கொண்டிருந்தேன்.எங்கள் முதுகை மட்டுமே நீங்கள் பார்ப்பீர்கள்.இரண்டு வார்த்தைதான் கேட்டிருக்கும்.
'கையெழுத்துப்போட வரணும்.' எந்த மகளென்று அவர் கேட்கவில்லை.
நானும் கூறவில்லை.
நீங்க எழுதுவதை விடாமல் படிக்கிறேன், புரிகிற மாதிரி தான் இருக்கு:-)
//நான் அனந்தன் மாமாவின் அக்கா மகன்.//
//உறவுச் சங்கிலி அறுபடும் இருக்கத்தை உணர்ந்தவள் நான்.//
எனக்குப் புரிஞ்சுதா இல்லியா?
Posted by: kekkepikkuni | 05/17/2009 at 04:29 AM
நன்றி கெக்கே பிக்குணி! நன்றாக புரிவது மட்டுமே இந்த நாவலின் நோக்கம். கூடவே thriller வகை.
உங்களுக்குப் புரிந்தது போலதான் இருக்கு ;)
மற்றபடி, எங்கே இடறுதுன்னு சொல்லுங்க , மாத்திடுவோம்.
Posted by: ரா.கிரிதரன் | 05/17/2009 at 08:42 AM
அப்ப சரி, எனக்கு முதலில் புரியத்தான் இல்லை. த்ரில்லர்ன்னவுடனே, திரும்ப ஒரு முறை படிச்சேன். நல்லா இருக்கு (இது முந்தயதை விட வேறு மாதிரியான மறுமொழி:-).
கதைசொல்லி ஆணா, பெண்ணா?
Posted by: kekkepikkuni | 05/17/2009 at 11:30 PM