வெளிவந்த சில நாட்களிலேயே படித்த புத்தகம் 'ரெண்டு'. பா.ராகவனின் முத்திரை புத்தகம். அவர் எழுத்துகளுக்குள் முதல் முறை வருபவர்கள் இந்த புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.
வெளியீடு - கிழக்கு பதிப்பகம்
போன ஞாயிறு அன்று வழக்கம்போல நியூஹாம் நூலகத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். கிழக்கு லண்டனில் புகழ்பெற்ற நூலகம். வாராவாரம் தவறாமல் சென்றாலும் குறைந்தது மூன்று மணிநேரமாவது செலவுசெய்யாமல் வரமாட்டேன். லண்டனில் எங்கே அதிகமாக போயிருக்கீங்க என யாராவது கேட்டால், நியூஹாம் நூலகம் என சொல்வதுதான் உண்மையாக இருக்கும்.இத்தனைக்கும் அது ஒன்றும் பெரிய நூலகம் இல்லை. சென்னை அமெரிக்கன் நூலகத்தை விட சின்னது.இரண்டே மாடிகள்.கீழே Quick Picks மற்றும் இசை ஆல்பங்கள், முதல்மாடியில் புனைவு/அபுனைவு நூல்கள். இங்கே தமிழ்,மலையாளம்,ஹிந்தி முதல் அத்தனை ஐரோப்பிய மொழி புத்தகங்களும் இருக்கிறது.
பொதுவாகவே தமிழில் பயமுறுத்தும் இந்திரா செளந்தர்ராஜன், பிழிய வைக்கும் லஷ்மி/அனுராதா ரமணன், மற்றும் ஆடிக்கொருதடவை சுஜாதா,நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி போன்ற புத்தகங்கள் வரும். என்னிடம் அதை விட அதிகமான புத்தகங்கள் இங்கேயே இருக்கிறது.மனைவி முறைத்ததால் இப்போது வாங்குவதை குறைத்துள்ளேன்; மேலும் எப்படியும் இந்தியா வரும்போது அதை என்ன செய்வது. கடல் கடந்து வந்த புத்தகங்கள்;கண்டிப்பாக மறுபடியும் படிக்கவேண்டியவை.
அதனாலேயே முதல் தளத்தில் தமிழ் பக்கம் கரம் சிரம் அகம் நீட்டாமலிருந்தேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடுத்தர வயதான ஒரு இலங்கை தமிழர் - பாவம் யாரோ அவரிடம் இங்கே First Class தமிழ் புத்தகங்கள் கிடைக்குமென வழி சொல்லியிருக்கிறார்கள் - தமிழ் புத்தக பகுதிக்கு வழி கேட்டார். வந்தாருக்கு வழி சொல்லும் லாங்குவேஜில் பேசியதால் கை பிடிக்காத குறையாய் கூட்டிக் கொண்டுபோனேன். பார்த்தால் இரண்டு 'ரெண்டு' புத்தகத்தின் காப்பிகள், மணக்க மணக்க புது புத்தகங்களுடன் இருந்தது. படித்து பல வருடங்கள் ஆனாலும், சுவையான புத்தகம் என தெரிந்ததால் எடுத்துக்கொண்டு ,அந்தப் பெரியவருக்கும் அந்த புத்தகத்தை சிபாரிசு செய்தேன். அவர் கூடவே ரமணிசந்திரன் புத்தகம் இரண்டையும் எடுத்துக்கொண்டார்.
Fast Forward >> அந்த இலங்கை பெரியவர் இப்போது:
அ) என்னைத் திட்டிக்கொண்ட்டிருக்கக் கூடும்.
ஆ) தன் மனைவி/மகளிடம் தர்ம அடி வாங்கிக் கொண்டிருக்ககூடும் ('பாவம் ,சும்மா வீட்ல இருக்கியே, புக்கு படிச்சா பொழுது போகும்னு பார்த்தா-முதல் தடவையே என்ன மாதிரி எடுத்து வந்திருக்கே! எவன் உனக்கு எடுத்துக்கொடுத்தது')
தப்பா நினைக்க வேண்டாம். இது பா.ராகவனின் தவறல்ல. புத்தகத்திற்கு வெளியே அட்டையில் சிறு தாளில் ஒட்டியிருந்த வாசகம் யாரையும் தொடப்பம் எடுக்க வைக்கும். அங்கே நூலகத்தில் Text என்ற பகுதியில் ஒட்டியிருந்தது - "living together with 2 concubines without marrying in Indian society" - இதை எங்கேயிருந்து உருவினார்கள் எனத் தெரியவில்லை. ஒரே வில்லங்கம் பிடித்த வாசகம் - தப்பும் தவறுமாக Synopsis உடன் வெளிவந்திருக்கிறது - அந்தப் பெரியவர் என்ன நினைத்தாரோ என்னைப் பற்றி.அடுத்த முறை பின்வாசல் வழிதான் நமக்கு.
கதை சிம்பிள்.அவந்திகா,மனோஜ்,விக்டர் மூவரும் ஒரெ பல்கலைகழகத்தில் சமூகவியல் ஆசிரியர்கள்.சோறு போடும் தொழிலையே,தங்கள் வாழ்விலும்,எண்ணங்களிலும் உண்மையென நம்பி தங்கள் மனசாட்சிபடி,சமூகத்தின் அசட்டு நம்பிக்கைகளை விட்டொழிக்கும் மனோபாவமுடையவர்கள். காதலா, நட்பா போன்ற குழப்பங்கள் இல்லாமல், உணர்வுகளின் அடிப்படையில் மூவரும் சேர்ந்து வாழத் தொடங்குகிறார்கள். சுற்று வட்டாரத்திடமிருந்து வரும் கேள்விகளை - தங்கள் மேதாவிலசத்தாலும், அகந்தையாலும், தங்களுக்குள் இருக்கும் அன்பு எனும் உணர்வின் மேலுள்ள தீவிர நம்பிக்கையினாலும் - சுலபமாக எதிர்கொண்டு பதில் சொல்லிவிடுகிறார்கள். எல்லாவற்றையும் முன்னமே முடிவு செய்திருந்தாலும், தங்களுக்குள் உருவாகும் சுலபமான கேள்வியை எதிர்பார்க்காமல் குழம்பி,தவித்து படும் தொல்லைகளே மீதி கதை.
புத்தகத்தில் பிடித்தவை:
1. எடுத்துக்கொண்ட கருவின் சாமர்த்தியம் - மிக டிராமாத்தனமாக செல்ல வேண்டிய கதையை, சுவாரசியமாக எடுத்துச்செல்லும் விதம்.
2. பா.ராவின் நடை.நடை.மேலும் நடை.
அற்புதமான விவரிப்புகளையும், இயல்பாக கூறி, அடுத்த வரி தனியாக நிற்காமல் பார்த்துக் கொள்வதில் சமர்த்தர். சில உதாரணங்கள் -
'போராளிகள் புல் பிடுங்கிக்கொண்டிருந்தார்கள்'
'காலம் - விளக்கடியில் பூச்சிக்குக் காத்திருக்கும் பல்லி போல கண் இரண்டையும் திறந்துவைத்துக்கொண்டு பிணம்போல் கிடக்கிற ஜாதியல்லவா அது?'
'நகர்வது தெரியாமல் நகர்வதில் பூமியை மட்டுமே அதற்கு நிகராகச் சொல்ல வேண்டும்'
'உறவுகள் என்ன ஆணுறை போன்றவையா? நினைத்த மாத்திரத்தில் மாட்டிக் கொள்வதற்கும், எடுத்து வீடுவதற்கும்'
3.மனோஜ் முடிவில் நடந்து கொண்ட விதம் - typical realism - என்பதற்கு உதாரணம்.
சில கேள்விகள்:
1 இந்த மூவரில் மனோஜ், விக்டர் - இருவர் பாத்திர படைப்பில் மட்டுமே நேர்மை , காரணமிருக்கிறது:
அ. மரபு, பச்சாம்பசலித்தனம், சமூக முரண்கள் - இந்த மூன்றும் அவர்கள் வாழ்க்கையிலேயே சிதறியதால் இவற்றை வெறுக்கிறார்கள்.
ஆ. மனோஜுக்கு - சமூகம் தன்னை ஒதுக்கியதாலும், மீண்டு எழ வேண்டுமென வெறியினாலும் இந்த மரபு எதிர்ப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
இ. விக்டருக்கு - தன் அம்மா தன்னை தனியே விட்டுவிட்டு, உடற்தேவைக்காக வேறொருவரை மணந்து கொண்ட வெறுப்பு , சமூக முரண் மற்றும் பாதுகாப்பற்ற தன்மை வரக் காரணமாகலாம்.
ஈ. அவந்திகாவிற்கு சிந்தனை தவறுவதற்கும், மரபை மீறுவதற்கும் காரணமே இல்லை. படிப்பு,சிந்திப்பது இவை காரணமல்ல. புரிந்து கொள்கிற தாய், சுதந்திரத்தை மதிக்கும் தந்தை - என வாழ்க்கையில் நடந்ததை காரணமாக காட்டிகிறார்கள்.
இதனாலேயே இந்த பாத்திரம் வலு இல்லாமல் இருக்கிறது - தூக்கி நிறுத்துவது பா.ராவின் நடை மட்டுமே.
2. Initial போட்டு பிரச்சனையைத் தொடங்காமல், குழந்தை கவிதாவின் தினப்படி வாழ்க்கையில் இந்த முக்கோண உறவு உருவாக்கும் குழப்பங்கள், அதை சமாளிக்க முடியாமல் அவள் கிளப்பும் பூதங்கள் என காட்டியிருந்தால் உண்மைக்கு நெருக்கமாக இருந்திருக்குமா?
3. திடீரென மூவருக்குள் சண்டை வருவதுபோல் உள்ளது; எல்லாவற்றையும் தூக்கிப் போட முடிந்த அவர்களால், பழமைக்கும் பச்சாம்பசலித்தனத்திற்கும் எதிராக இருக்கும் அவர்களால் - எப்படி Initialஐ போட முடியாமல் போனது - குறிப்பாக விக்டருக்கும்,மனோஜுக்கும்? (ஏன் என்று அடுத்த சில வரிகளில் சொல்கிறேன்)
4.ஆரம்பத்தில் எனக்குத் தோன்றியது இதுதான் - இவர்களுக்குள் பிரச்சனை வந்தால் சில்லரைத்தனமாக இருக்குமே?
குழந்தைக்கே இந்த உறவின் குழப்பங்கள் மிகுந்த சிரமத்தை கொடுத்திருக்கும்.
5. முதல் அத்தியாத்தில் கடைசி வரை கதையை விவரிப்பது ஒரு பெண் எனத் தெரியவேயில்லை. இது ஒரு குறையா எனக் கேட்கலாம். ஆனாலும் முதலில் அவந்திகாவின் பாத்திர படைப்பில் பெண்ணாக உருவகப்படுத்த ஆசிரியர் முயற்சி செய்ததாகவே தெரியவில்லை. இதனாலேயே அவந்திகாவின் குரல் பா.ராவாகவே ஒலிக்கிறது - புத்தகம் முழுவதும். படிக்கும்போதும், படித்த பின்னும் எனக்குப் முதலில் தோன்றியது இது.
6. தங்கள் அறிவு மண்டியிடும் இடங்கள் என ஒவ்வொறு அத்தியாயத்திலும் சில விளக்கங்கள் வருகிறது. சரணாகதி வேண்டாம். குறைந்தபட்சம் தங்களால் சமாளிக்க முடியாத குழப்பங்கள் வரும் எனத் தெரியாமலா இருப்பார்கள். அல்லது சமாளிக்க முடியாத பிரச்சனைகளே இவர்கள் எதிர்கொண்டதில்லையா? - இது எனக்குப் புரியவில்லை.

படிக்கத் தூண்டும் விமர்சனம்.நன்ராக எழுதியுள்ளீர்கள்.
//அதனாலேயே முதல் தளத்தில் தமிழ் பக்கம் கரம் சிரம் அகம் நீட்டாமலிருந்தேன்.//
பா.ராவை படித்ததால் வந்த வினையா?
Posted by: Somasundaram | 05/07/2009 at 11:00 AM