05/08/2009

NEXT POST
பா.ராகவனின் 'ரெண்டு' - புத்தக விமர்சனம் வெளிவந்த சில நாட்களிலேயே படித்த புத்தகம் 'ரெண்டு'. பா.ராகவனின் முத்திரை புத்தகம். அவர் எழுத்துகளுக்குள் முதல் முறை வருபவர்கள் இந்த புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கலாம். வெளியீடு - கிழக்கு பதிப்பகம் போன ஞாயிறு அன்று வழக்கம்போல நியூஹாம் நூலகத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். கிழக்கு லண்டனில் புகழ்பெற்ற நூலகம். வாராவாரம் தவறாமல் சென்றாலும் குறைந்தது மூன்று மணிநேரமாவது செலவுசெய்யாமல் வரமாட்டேன். லண்டனில் எங்கே அதிகமாக போயிருக்கீங்க என யாராவது கேட்டால், நியூஹாம் நூலகம் என சொல்வதுதான் உண்மையாக இருக்கும்.இத்தனைக்கும் அது ஒன்றும் பெரிய நூலகம் இல்லை. சென்னை அமெரிக்கன் நூலகத்தை விட சின்னது.இரண்டே மாடிகள்.கீழே Quick Picks மற்றும் இசை ஆல்பங்கள், முதல்மாடியில் புனைவு/அபுனைவு நூல்கள். இங்கே தமிழ்,மலையாளம்,ஹிந்தி முதல் அத்தனை ஐரோப்பிய மொழி புத்தகங்களும் இருக்கிறது. பொதுவாகவே தமிழில் பயமுறுத்தும் இந்திரா செளந்தர்ராஜன், பிழிய வைக்கும் லஷ்மி/அனுராதா ரமணன், மற்றும் ஆடிக்கொருதடவை சுஜாதா,நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி போன்ற புத்தகங்கள் வரும். என்னிடம்...
PREVIOUS POST
வயலின் கலைஞர் - சி.சுப்ரமணிய அய்யர் (C.S.Iyer) சி.வி.ராமனை தெரிந்த அளவிற்கு சி.சுப்ரமணிய அய்யரை (C.S.Iyer) தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு நோபல் பரிசால் இந்தியப் புகழ் அடைந்த சி.வி.ராமன், சந்திரசேகர் (இவர் மகன்) குடும்பத்தை சேர்ந்தவர் இவர். சி.வி.ராமனின் சகோதரர்.தன் தம்பி, மகன் இருவரும் நோபல் பரிசைப் பெற்றவர்கள்;இவரோ இசை ஆர்வலர்,வயலின் இசைப்பதில் தேர்ந்த கலைஞர். The Art and Technique of Violin Play என்ற புத்தகத்தை 1941 எழுதியவர்.மெட்ராஸ் பிரசிடென்சியில் 1922 தன் முதல் கச்சேரியை ஆரம்பித்துவைத்து, தன் வாழ்நாள் முழுவதும் வயலினுக்காகவே உருகினார்.வயலின் வாசிப்பில் மேல் அவருக்கிருந்த ஆர்வம் ஐரோப்பா வரை கூட்டிச் சென்றது. பல நாடுகளுக்கும் சென்று கிழக்கிசையை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக அவர் 1933இல் ஐரோப்பாவில் பல மேற்கிசை வயலின் இசைப்பவர்களுடன் மேடை கச்சேரி செய்தார். ரவிசங்கர் போல் கிழக்கு-மேற்கு இசை நுணுக்கங்களுக்கு தன் பயணங்கள் வழியே வித்திட்டவர். அதுவரை கிழக்கிசையின் மேல் பற்றுகொண்டு இந்திய இசையை கற்றுக் கொள்ள இந்தியாவிற்கு வந்தவர்களே அதிகம்....

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments