05/01/2009

PREVIOUS POST
தமிழிசை - கட்டை ஒரு விளக்கம் நேற்று என் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்த போது மெதுவாக பேச்சு தமிழ் சினிமா பக்கம் திரும்பியது.கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் சினிமா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹே ராம் பட பின்னணி இசை என பேச்செல்லாம் சினிமா சுருள் வாடை. எவ்வளவு நேரம் தான் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பது, நாம் என்ன அடூரின் படத்திலா நடிக்கிறோம்? மெதுவாக இசை,கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி எனப் பேச்சு மையம் கொள்ள ஆரம்பித்தது. அப்போது என் நண்பன் - 'ரொம்ப நாளா கேக்கணும்னு இருந்தேன். அவ்வை சண்முகி படத்துல கமல் ஒரு பாட்டுக்கு முன்னாடி,ஐந்து கட்டைன்னு ஏதோ சொல்லுவாரே, அப்படின்னா என்ன?' என ஆரம்பிக்க - நான் சொன்ன விவரத்தினால் சத்தியமாக இருக்காது என நினைப்பதால்- அரை மணிக்குப் பிறகு,சுகமானதொரு முடிவோடு, தன் வீட்டிற்கு கிளம்புவதாகச் சொல்லி - செல்லவேண்டிய வழிக்கு நேரெதிரான சாலையில் ஏன் ஓடத் தொடங்கினான்? அவனிடம் கூறியதை இன்னும் எளிமையாக சொல்ல முடியுமென பிறகு தோன்றியதால், இந்த பதிவு....

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments