04/14/2009

PREVIOUS POST
ஒரு வணிகரின் நாட்குறிப்பு - 1 பாண்டிச்சேரி, ஒரு ஐம்பது ஆண்டுகளாகத்தான் ஜாலியான நகரமாக டாஸ்மாக்கர்களால் போற்றப்படுகிறது. சுமார் முன்னூறு ஆண்டுகள் முன்னால் பாண்டியிலும் அதன் எல்லைப் புரங்களிலும் பானிபெட்,குருக்ஷேத்திரம் போல போர் நடந்துள்ளன. ஆனந்த ரங்கப் பிள்ளை 1750களில் எழுதிய நாட்குறிப்புகளில் நம் காலத்து மகாயுத்தங்கள் போல நடந்ததாக விரிவாக எழுதியுள்ளார். அதில் ஒரு விஷயம் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது.கிட்டத்தட்ட சிவாஜி படத்தின் 'ஆபிஸ்' ரூம் போல பாண்டிச்சேரிவாசிகளை பிரெஞ்சு மற்றும் இங்கிலாந்து படையினர் நடத்தியது கொடுமைகளில் ஒன்றாக உள்ளது. 1756ஆம் ஆண்டு ரங்கபிள்ளை எழுதுகிறார் - "துவால் டெ லேய்ரிட் (Georges Duval de Leyrit) முதற்கொண்டு எல்லாரும் பணம் பிடுங்குவதில் குறியாக இருந்தனர்.குறிப்பாக பாண்டிச்சேரியில் பணம் இல்லாதபோது,பணம் கொடுக்காதவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.இது நகராட்சியில் எழுதப்படாத விதியாகவே இருந்தது.ஆகஸ்ட் 17ஆம் தேதி,மஹாநாடார் வகுப்பை சேர்ந்த இரண்டு ஊர் பெரியவர்களை தனியான ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். அவர்களிடம் பாண்டிச்சேரியிலுள்ள நாடார் வகுப்பைச் சேர்ந்தவர்களின் சொத்து மதிப்பு...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments