ராஸ லீலா புத்தக விமர்சனத்தை இந்தப் பதிவில் படித்து, பல 'subjective' விமர்சனங்களை அள்ளி வீசிய வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
முதலில், இந்த விமர்சனத்தோடு கொஞ்சம் ஒத்துப்போய், இதை எதிர்த்து தெளிவான கருத்துகளை முன்வைத்தவர்களுக்கு (3 பேர் தான்!!) நன்றி.
இந்த விமர்சனம் 'ராஸ லீலா' என்ற புத்தகத்தை பற்றியதே தவிர,அதை எழுதிய சாரு நிவேதிதா பற்றி அல்ல.பல பின்னூட்டங்களை இட்டவர்கள் ஏதோ நான் சாருவை விமர்சித்தது போல ஆத்திரப்பட்டிருக்கிறார்கள். இந்த பின்னூட்டங்களை இந்த வலைப்பகுதியில் வெளியிட மாட்டேன்.இதற்கான சில காரணங்கள்:
1. இந்த விமர்சனத்தில் ஒரு சதவிகிதமோ/வரியோ சாருவை பற்றி அல்ல. இது முழுக்க முழுக்க அவர் எழுதிய புத்தகம்,குறிப்பாக 'ராஸ லீலா'.இதில் தனிப்பட்ட முறையில் சாருவை விமர்சனம் செய்திருக்கிறேன் என எண்ணினால் தயவுசெய்து அதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.அதை நீக்கி விடுகிறேன்.
2. ராஸ லீலா என்ற புத்தகத்தை ஒரு விமர்சனப் பார்வை நோக்கிலே எழுதியுள்ளேன். உங்களுக்கு வேறு எண்ணமோ , பார்வையோ இருந்தால் தெரியப்படுத்தவும் , அதை பற்றி விவாதிக்கலாம்.
3. உங்களில் பலரைப் போல நானும் சாரு வெளியிட்ட அனைத்து கட்டுரைகள்,கதைகள்,நாவல்களைப் படித்துள்ளேன்.இன்றும் அவர் வலைப்பக்கம் மூலம் எழுத்துக்களை படித்து வருகிறேன்.ஆதலால் அவரின் எதிரியாக பாவித்து வசைவுகளை அள்ளி வீசவேண்டாம்.
4. குழுக்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.அதனாலேயே இந்த விமர்சனத்திலும் குழுவிவாத மேடையாக்கக் கூடாதென மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறேன்,எப்போதும் இருப்பேன்.
5. ராஸ லீலாவை விமர்சிக்க என்ன உரிமையிருக்கிறது,நீஏதாவது நாவல் எழுதியிருக்கிறாயா போன்ற அனாவசிய கேள்விகள் கேட்க வேண்டாம்.நல்ல படைப்புகளை பார்த்து/படித்து/கேட்டு , அவற்றைப் பற்றி என் விமர்சனத்தை அளிப்பதே இந்தப் பகுதியில் நான் செய்ய நினைத்தது.முடிந்தவரை இசை சம்பந்தமான பதிவுகளை எழுதுவதே எண்ணம்- சில சமயம் புத்தக விமர்சனங்கள்.

Recent Comments