04/15/2009

NEXT POST
ஒலியும் மெளனமும் - தொடர்ச்சி ஜெமோ பதிவு செய்த ஒலியும் மெளனமும் குறித்த கருத்துக்கள் மிகவும் விவரமாக ஆராயவேண்டிய ஒன்று.இது தொடர்பாக எனது சில்லரை கருத்துகள்: எனக்கு காட்சிகளே எப்போதும் ஒலிகளாய் பதிந்துவிடும்.ஏனென்றால் எந்தக் காட்சியையும் என்னால் நிசப்தத்தில் பார்த்ததாக நினைவில் இல்லை.எல்லாக் காட்சியுமே சத்தத்துடன் தான் ஞாபகத்தில் வருகிறது.இதனாலேயே நான் பல வருடங்களுக்கு முன்னால் எழுதிய/படித்த வார்த்தைகள் காட்சியமைப்பாகவும்,சத்தத்தோடுமே எனக்கு பதிந்துவிடும். அந்த வார்த்தைகளை இப்போது படிக்கும்போது அதே காட்சியமைப்போ,ஒலியோ தோன்றவில்லையென்றால்,அந்த வார்த்தைகளோ/படமோ என்னைப் பொருத்தவரை தோற்ற கலையே. என்னுடைய,மற்றவர்களின் அனுபவத்தை இந்த தராசை வைத்தே எடை போடுகிறேன். முன்னமே உங்களிடம் (ஜெமோ) சொன்னதுபோல விஷ்ணுபுரம் எனக்கு ஒரு ஆரஞ்சு-சிவப்பு நிற ஆறு ஓடும் பிம்பத்தையே காட்டுகிறது. ஒவ்வொருமுறை அந்த புத்தகத்தை பற்றி படிக்க/கேட்கும் போதும் இந்த நதியும்,அந்த கரையில் இருக்கும் விஷ்ணு கோயிலுமே தோன்றுகிறது.கூடவே ஞான சபையின் மணிஒலியும், பறவை பறந்து வரும் சத்தமும் என் காதில் கேட்கும்.அதே போல் யானை பிளிரும் சத்தமும்...
PREVIOUS POST
ஸ்பானிஷ் கிதார் கலைஞர்கள் கிதாரை எவ்வளவு விதங்களில் வாசிக்க முடியம்? மின்சாரத்தில் இயங்கும் கிதார் தந்திகளின் வழுக்கல்களிலும் அவற்றின் சுருதி கூட்டலினாலும் விதவிதமான நுண்ணலைகளை இயக்க முடியும்.இவற்றைத் தவிர acoustic மாடல் கிதார்களில் ஒருசில பயன்பாடுகளே சாத்தியம்,குறிப்பாக சில சுரஸ்தானங்களை(octave) மட்டுமே எட்ட முடியும். மெக்ஸிகோவின் மூலையிலிருந்து வந்த ரோட்ரிகோ மற்றும் காப்ரீலா(Rodrigo and Gabriela) தங்கள் கிதார்களில் செய்யும் விளையாட்டுகள் இதுவரை இல்லாத ஊடுபாவங்களை கிதார் இசையில் திறந்து வைத்திருக்கிறது.பல்லால் தந்திகளை இசைத்த ஜிமி ஹெண்ட்ரிக்ஸ் (Jimi Hendrix),பலவிதமான தாளங்களில் சுரஸ்தானங்களை (octave) இசைத்த ஜான் மெக்லாக்லின் (John Mclaughlin) வரிசையில் இந்த ஜோடி தங்களுக்கென நிலையான இடத்தை progressive rock இல் பிடித்திருக்கிறார்கள். கிதார் தந்திகளில் தனிச்சுர இசையையும் (melody) , தங்கள் கிதாரின் மற்ற மரச்சதுரங்களில் தாளங்களையும் கையாள்வது இந்த ஜோடியின் தனித்தன்மை.இதனாலேயே இவர்களின் இசையில் சுரம்,தாளம் ஒரு அற்புதமான இசைச் சேர்கையை உருவாக்குகிறது. சுர அடுக்குகளை (chords) ஆதாரமாக வைத்து...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments