நீண்ட நாட்களாகவே ஒத்திசைவு(Symphony) இசைக் கோர்வை(Orchestra) தொகுப்புகளை பகுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.
மோசார்ட்,பீத்தோவனிலிருந்து, ஷோன்பெர்க்,பியர் புலோ(Pierre Boulez),விஜய் ஐயர் இசை ஆக்கங்களை ஆரன் கோப்லாண்டின் (Aaron Copland) "What to listen in Music" என்ற புத்தகத்தின் மூலம் புரிந்து கொள்ள முயற்சிசெய்து கொண்டிருக்கிறேன். 1950 களில் வெளியான இந்த புத்தகத்தை ஆரன் தன் இசையமைப்பாளரின் அனுபவத்தை மட்டும் வைத்து எழுதியிருக்க இயலாது. பலதரப்பட்ட மக்களிடம் தன் இசையை கொண்டுசென்று ,அவர்கள் புரிந்து கொண்ட உணர்வுகளைக் கொண்டு எழுதியுள்ளார்
.
மேற்கிசையை அதன் வேரிலிருந்து ஆரம்பித்து ரொமாண்டிக் இசை கத்தோலிக்க இசை,12 சுருதிகளின் ஆரம்பம், ஷோன்பெர்கின் ஆராய்ச்சியில் வெளியான atonal இசைவகை பற்றி ஒரு முறையான தொகுப்பு இந்த புத்தகம்.லியனார்ட் பெர்ன்ஸ்டீனின் (Leonard Bernstein) "The Unanswered Question" புத்தகத்தைவிட அதிகமாகவே புரிந்தது.இருபதாம் நூற்றாண்டின் மாற்றங்கள் , குறிப்பாக ஷோன்பெர்கின் atonal இசை முயற்சி பலவித மாற்றங்களைக் கொண்டுவந்தது. அரிஸ்டோட்டில் காலத்திலிருந்து கணித முறைகளை இசை கையாண்டுவந்திருக்கிறது. 12 சுருதிகள், இசைக் கருவிகளின் Circle of Fifths - இவை கணித முறைகளின் வழியே செயல்பட்டு வந்திருக்கின்றன.Zither கருவியை பயன்படுத்தி Anton Karas இசைத்த இந்த இசை அற்புதமான tonal system ஆகும்
.
மேற்கத்திய இசை, குறிப்பாக ஒத்திசைவுகளின் கோர்வைகள் ஒரு ஆதார சுருதியை கொண்டிருக்கும் (எ.கா - Mozart Symphony in G Major). இந்த ஒத்திசைவு G என்னும் நாணை ஆதாரமாகக் கொண்டது.Circle of Fifths முறைப்படி Gயிலிருந்து மற்ற நாண்களுக்கு(C,F) தாவிச்செல்லும் இந்த ஒத்திசைவு , கடைசியில் G நாணிற்கே வந்து சேரும். இதைத் தான் ஆதார சுருதிகளின் வட்ட முறை. கடைசியில் சேரும் இந்த ஆதார சுருதியே இந்த முறை இசை நமக்கு முடிந்ததுபோல் ஒரு உணர்வையும் அதே சமயம் நிம்மதியையும் அளிக்கிறது. ஒத்திசைவின் ஆரம்பத்தில் உருவாகும் இந்த இறுக்கம், மெல்ல விலகி ஆதார சுருதி மறுபடி ஒலிக்கும்போது அமைதியுணர்வை தந்திடும். இதுவே பத்தொண்பதாம் நூற்றாண்டிற்கு முன் இசையின் வடிவம். மோஸார்டின் ஒத்திசைவுகளில் மிகவும் பிரபலமான Symphony no. 3KV 216 G Major இல் வரும் G நாணின் வருகை
:
ஆரம்ப இசை:
முடிவில்: இந்த tonal வகையை ஷோன்பெர்க் உடைத்தெரிந்தார்.இந்த இசைவகை சுருதிகள் வட்ட முறைபடி இசைக் கோர்வை தொகுக்கப்படாது. இதனால் முடிவில் ஆதார சுருதிக்கு வரும் வேலை இந்த நாண்களுக்கு கிடையாது.இதனாலேயே atonal வகை இசையை வீட்டிற்கு திரும்பாத இசை எனக் கூறுவர். இதனால் avant-garde வகை இசை முயற்சிகள் முடிவில்லாதன்மையை கொண்டிருக்கும்.Pierre Boulezஇன் Symphony of Three Orchestras இதைப்போல ஒரு கணித எண் தொடர்களின் வழியே அமைக்கப்பட்ட ஒரு இசைக் கோர்வை. இந்த இசை எண்களின் Permutations வழியே கட்டப்பட்டுள்ளது. இதனால் இதன் நாண்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதது போல தோன்றினாலும், ஒரு முடிவில்லாத இசை அமைப்பை கொண்டிருக்கும். இதை Golden Variations என கூறுவர்
.
ஆனால் இந்த கணிதவடிவங்கள் கடைசியில் தங்களின் Permutations வழியே tonal இசை வடிவை அடைவதை பல பண்களினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இந்த நூற்றாண்டில் tonal இசை வகை மீண்டும் தலைதூக்கியுள்ளது
.
ஷோன்பெர்க் அமைத்த இந்த atonal வகை tonal வகையின் ஒரு சாத்தியமே என்றும் ; இது புரட்சியானதா அல்லது நம் காலத்தில் நிரூபிக்க இயலாத இயற்கையான இசை வடிவமா என்பதும் இப்போதுள்ள ஒரு கேள்வி.இதன் பதில் இன்னும் இசை ஆர்வலர்களையும்,அமைப்பாளர்களையும் வடிவ சோதனைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறது
.
வரும் வாரங்களில் இந்த இசை மோஸ்தர்களை இன்னும் சற்று விரிவாக எழுதலாம் என்ற எண்ணம். மேலும் கருணாமிர்தசாகரம் நூலில் அபிரகாம பண்டிதர் நிறுவிய இந்திய தமிழிசைக்கும் உள்ள தொடர்பையும் பார்க்கலாம்
.
Recent Comments