வட்டப்பாலை தமிழிசைக்கு சொந்தமானது.உலக கொடை.இதே அடிப்படையில் தான் Circle of Fifths உருவானது.வட்டப்பாலை முறையை ஆராய்ந்தவர்களுள் முக்கியமானவர் அபிரகாம பண்டிதர்.அவர் எழுதிய 'கருணாமிர்த சாகரம்' நூலில் இதற்கான விரிவான ஆய்வுகளை செய்துள்ளார்.அது என்ன வட்டப்பாலை?
சிலப்பதிகாரத்தை ஆதாரமாக வைத்து மேற்கிசையில் இருக்கும் சுரஸ்தானங்களைப் (Octave) போல எப்படி தமிழிசையில் பழங்காலத்திலிருந்து இந்த ஆதார சுருதிகள் ஆராயப்பட்டன என நுணுக்கமாக எழுதியுள்ளார்.சாரங்க தேவ் அமைத்த ஸ்தாயிகள்,இசைக்கு அடிப்படையான சுரங்கள்-அவற்றின் geometric progressions அனைத்தையும் விரிவாக விவாதித்திருக்கிறார்.இவை அனைத்தும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ இசைத்த யாழ் கருவியில் ஆதாரமாக உள்ளதாகவும்,இதனாலேயே கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானியிசைக்கு தமிழிசையே அடிப்படை என வாதிட்டுள்ளார்.(ஆயப்பாலை,சதுரப்பாலை,திரிகோணப்பாலை,வட்டப்பாலை). ஏழு அடிப்படையான சுருதிகளை (ச-பா,ச-மா) ஆதார சுருதியாக பாவித்து,4 யாழ்களிலும் பண்டையத் தமிழர் இசைத்தனர். இந்த நான்கு யாழ்களுமே வட்டப்பாலைகளாகும்.
சிலப்பதிகாரம் ஆய்ச்சியர்குரவையில் வரும் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.அழுத்தமான ஆதாரம்.
ஆயஞ் சதுரந் திரிகோணம் வட்டமெனப்
பாய நான்கும் பாலை யாகும்
ஒவ்வொறு வட்டப்பாலையிலும் பல சுரஸ்தானங்கள் அமைத்தனர். சுரஸ்தானங்கள் எண்களின்படி 1,2,4,8..என geomtetic progressionஇல் செல்லும்.இதன்படி முதல் சுரஸ்தானத்தில் 7 சுரங்கள் உண்டு (ச-ரி வரை).அடுத்த சுரஸ்தானத்திலும் அதே ஏழு உண்டு, ஆனால் அவற்றின் நுண்ணலை (frequency) இரண்டு மடங்காகும்.இதனால் முன்னதை பார்க்கும் போது இது சற்றே கிரீச் வகை ஓசை.
Courtesy: www.tamilnation.org
இதன் மூலம் ஏழு சுரங்கள், ஐந்து விகிர்த சுரங்களும் (ஷட்ஜம்,பஞ்சமம் + ரிஷபம்,காந்தாரம்,மத்தியமம்,தைவதம்,நிஷாதம்) போன்ற ஒலிநிலைகளும் சேர்ந்து 12 இசை ஒலி நிலை (பன்னிரு நிலம்).இந்த பன்னிரெண்டு சுரங்களும் (ச-ப,ச-ம) பண்டைய தமிழர்கள் உபயோகித்து வந்தனர்.இதை ஆயப்பாலை முறையையே கர்ணாடக சங்கீதத்தின் ஆதாரமாக உள்ளது.
இவற்றைப் பற்றி இன்னும் விரிவாக மற்ற பதிவுகளாக போட ஆசை, படிப்பவர்களின் ஆர்வத்தைப் பொருத்தது.

Interesting post.
Can you write in depth about this book and music in general?
I was not able to find this book in store.
Posted by: Somasundaram | 04/20/2009 at 07:45 PM
Please write more on Tamiz music.
regards
ramanan.pg
Posted by: Ramanan.pg | 07/24/2010 at 10:04 AM
Ramanan.Planning to write more.Thanks.
Posted by: ரா.கிரிதரன் | 07/25/2010 at 08:57 AM
தமிழிசை வட்டப்பாலைக் குறித்து எளிய தமிழிலில் நீங்கள் எழுத வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
ப.கோபாலகிருஷ்ணன்
நாதஸ்வர கலைஞர்
Posted by: p.gopalakrishnan | 09/25/2011 at 07:39 PM