கிதார் பிரசன்னாவின் இசை பயணம் ஒரு இன்பமான சக்கப்பிரதமனின் பயணம். "Be the Change" என்ற தொகுப்பில் மிருதுவான வழுக்கலில் இசைத்த chords , அவரின் "Electric Ganesh Land" -இல் இந்த தீவிரமான பரிசல் சூராவளி உச்சத்தை அடைந்துள்ளது.
ஒரு மதமதப்பான ஞாயிற்றுக்கிழமை மதிய நகர வாழ்க்கையை அற்புதமாக இரு சித்தரிப்புகளில் வாசித்திருக்கிறேன். காப்ரியல் கார்சியா மார்க்கே எழுதிய "Tuesday Siesta". இதற்கு இணையான ஒரு இசைதான் "Dark Sundae in Triplicane".இதில் வரும் percussion கருவி இசை பல உருவகங்களை உருவாக்குகிறது - கோயில் யானை மெதுவாக நடந்துபோகும் பிம்பமே தோன்றுகிறது.இந்த கோயில் யானையே ஒரு நகரத்தின் மதிய மெத்தனத்திற்கு உதாரணம்.
<
கிரி,இது இரண்டுமே கிடார் பிரசன்னா வாசித்ததா? யானை நடந்து போகும் பிம்பம் உங்களுடையதா அல்லது பிரசன்னா கூறியதா? ஜெமோ-வும் இசை கேட்கும் பொது பிம்பங்கள் வருவதை பற்றி கூறுகிறார். எனக்கு ஏனோ அப்படி வருவதேயில்லை. ஒரு விதமான மன எழுச்சி மட்டுமே தோன்றும். சில சமயங்களில் அந்த இசை-க்கான mood உடன் என் சொந்த வாழ்வின் சில நிகழ்ச்சிகளையோ அல்லது என்னை மையபடுத்தி சில நிகழ்வுகளோ கற்பனையில் ஓட்டி கொள்வேன். இது எல்லாமே சரியான இசை கேட்கும் முறை என்று தான் நினைகிறேன்.
Posted by: Prabhu R | 07/05/2011 at 10:05 PM