04/27/2009

NEXT POST
யுத்த கவிஞர் - Wilfred Owen யுத்தங்கள் எப்போதும் எங்கு நடந்தாலும் வேதனை தருவன. இலங்கையில் நடப்பது கோர யுத்தம்.இதைப்போல உள்நாட்டுக் கலவரங்களை சந்தித்துக்கொண்டிருக்காத நாடுகளே இல்லை.உயிர் இழப்பு ஒருபுறமிருக்க,உடமைகள்,உயிர்களுடன் அகதியாவது மனிதமனங்களும் தான். Red Cross, Amnesty போன்ற அமைப்புகள் உடல் உபாதைகளை நீக்க நடவடிக்கை எடுத்தாலும், மனத்தில் உருவாகும் வெறுப்பு,அவநம்பிக்கை மனித நேயத்திற்கு விடை கொடுத்து விட்டது. நம் நாட்டின் ஊடகங்களில் ஒரு வரியை உபயோகப்படுத்துவர் - 'அப்பாவி ஒருவர் இறந்து விட்டார்'. இந்த அப்பாவி மனிதர்களில் தான் எத்தனை விதங்கள்- வயதால்,உள்ளத்தால்,குழப்பத்தால்,வலியால் அவர்களனைவரும் அப்பாவிகளே. ஈராக்,வியட்னாம்,ஆப்ரிக்கா,இலங்கை என யுத்தம் நடந்த பூமிகளை தொலைக்காட்சியில் பார்ப்போம், படிப்போம், கதைப்போம். வேறென்ன செய்ய முடியும் நம்மால்?யுத்த களத்திலுள்ள நம்மவர்களுக்காக ஒன்றுமே செய்யமுடியாது. அது வீரனாகட்டும் அல்லது பொதுமக்களாகட்டும். உயிர் விரயம் அவநம்பிக்கையின் சின்னம் தானே? சாம்ராட் அசோகர் மனம்புழுங்கியது எந்த உடலைப்பார்த்து? மவுரிய உடலா, கலிங்க உடலா? இணையத்தில் நம்மால் சில வார்த்தைளை மட்டுமே அர்ப்பணிக்க முடியும்;எந்த...
PREVIOUS POST
அடுத்தும் போர் - நாகார்ஜுனனின் தமிழாக்கம் இந்த தமிழாக்கத்தை சற்றே மாற்றிய நாகார்ஜுனன்,கூர்மையாக,to the point இன்னும் செழுமையாக்கிவிட்டார். நன்றி. தன் பதிவில் - "இதே கவிதையை சற்றே மாற்றிச் செய்திருக்கிறேன். என்னென்ன மாற்றம், கவனித்து வாசிக்கவும். அடுத்தும் போர் ---------------------- நட்புமிக நடந்தோம் கூற்றுவனிடம். அருகமர்ந்து சுவையற்ற தண்ணுணவும் அருந்தினோம். எம் கையில் குவளை-உணவும் அவன் சிந்த மன்னித்தோம். அவன் அடர்பசிய துர்மூச்சும் முகர்ந்தோம். கண்ணெமதும் கசிந்தாலும் உழற்றவில்லை எம் வீரம். உமிழ்ந்தான் தோட்டாப் பல எம்மீது இருமினான் ஊசிக்குண்டும் பல. தனியே அவன் பாட இணைந்தோம் குழுவென. அரிவாளும் கொண்டவன் எமை மழிக்க அடித்தோம் சீட்டி! ஆ! எமக்கவன் எதிரியல்லன்! பழம் சகா அவனுடன் பழகிச் சிரித்தோம். எம்மில வீரர் எவர்க்கும் ஊதியமில்லை அவன் சக்தியதை உதைக்க. இன்னும் சிரித்தோம் வீரத்தார் மேலும் வருவாரென, பெரும்போர் மேலும்பல வரட்டுமென. ஆங்கே பெருமித வீரர் எவரும் பொருதுவதோ கூற்றுவனுடன் வாழ்வுக்காய் பிறருடன் கொடிக்காய்.

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments