எழுபத்து ஆறு வருடங்கள் கிதாரோடு வாழ்வை இணைத்துக்கொண்டு,கடந்த நூற்றாண்டில் ஈடில்லாத ஒரு இடத்தை பிடித்தவர் ஆன்ரே ஸெகோவியா (Andres Segovia). இவர் 1920களில் ஒத்தையாளாக folklore எனப்படும் கிராமிய வாத்திய இசையிலிருந்து கிதாரை அடுத்த கட்டமான கிளாசிகல் இசையை வாசிக்க ஆரம்பித்தவர்.அதுவரை கிதார் நகர மற்றும் கிராமப்புரங்களின் பொழுதுபோக்கு இசையாகவே இருந்து வந்தது.குறிப்பாக குளிர் காலங்களில் மதியான நேரங்களில் விவசாயிகள் தங்கள் நேரத்தைக் கடத்துவதற்காக கிராமிய இசையுடன் லூட் (lute) மற்றும் கிதார் இசைத்து வந்தனர்.
ரோமாண்டிக் இசை எனப்படும் மிகுஉணர்ச்சி இசை வடிவங்கள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில், குறிப்பாக 1800களில் கிதாரை கீழ்நிலை இசைக் கருவியாக மதித்தனர்.ப்ராம்ஸ் (Brahms) போன்ற இசையமைப்பாளர்கள் கூட கிதாரை தங்கள் இசை கருவிகளின் கூட்டத்தில் ஒன்றாகக் கருதவில்லை.வயலின்,வயலா,செல்லோ,பியனோவை மதித்தவர்கள் கிதாரை ஏழைகளுக்கான வாத்தியக் கருவியென ஒதுக்கினார்கள்.இதைப்போலவே பல அற்புதமான சத்தங்கள் கொடுத்த ஜெம்பா டிரம்ஸ் போன்ற ஆப்ரிக்க இசை கருவிகள் கூட மேடையேர இருபதாம் நூற்றாண்டு ஆனது.இதற்கு முக்கிய காரணம் உலகத்தில் பரவியிருந்த காலனிய ஆதிக்கம், ரோமாண்டிக் இசை உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் இசை மேடையேற இருக்கவேண்டிய பண மற்றும் அரசியல் பலம். இதுபோன்ற எதுவும் இல்லமலிருந்த்ன கிதார்,ஆப்ரிக்க இசை கருவிகள்.
கிதாரை மேடையேற்றிய பெருமை ஆன்ரே ஸெகோவியாவையே சாரும்.ஸ்பெயின் நாட்டில் பிறந்த இவர், நான்காம் வயதில் தன் மாமாவிற்கு இருந்த கிதார் ஆர்வம் இவருக்கும் தொற்றிக் கொண்டது.தன் பதினாறாவது வயதில் மட்ரிடில்(Madrid) பிரான்ஸிஸ்கா டெ அஸிஸ் டார்ரேகா (Francisco de Asís Tárrega) , மற்றும் பாக்கின் (Bach) இசையமைப்புகளை இசைத்தார்.இது பல இசைக்கலைஞர்களுக்கு கேளிக்கையானது.ஏனென்றால் கிதாரில் அதுவரை யாருமே கிளாசிகல் இசையை வாசித்ததில்லை.கிதார் போன்ற வாத்தியங்களால் கருவியின் சத்தத்தைக் கூட்ட இயலாது.ஆனாலும் அந்த இசை நிகழ்ச்சி பலராலும் போற்றப்பட்டு ஸெகோவியா மிகப் பிரபல இசை கலைஞரென போற்றப்பட்டார்.
பின்னர் 1928இல் நியூயார்க் சென்று தன் இசையால் பல இசைக்கலைஞர்களை கிதார் பற்றி புரியவைத்தார்.இதை கேட்ட மக்கள் மட்டுமல்ல இசைக் கலைஞர்களும் கிதாரை வைத்து பாரம்பரிய இசை கூட அற்புதமாக இசைக்க முடியுமென தெரிந்துகொண்டார்கள்.மெதுவாக அவரின் புகழ் ஐரோப்பாவில் மட்டுமல்லாது மேற்கே முழுவதும் பரவியது.குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அவர் லண்டனிலிருந்து இசைத்த பாக் மற்றும் பீத்தாவென் இசைக்கோர்வைகள் ரசிகர்களை மட்டுமல்லாது பல இசையமைப்பாளர்களையும் கட்டிப்போட்டுவிட்டது.
அவர் இசைத்த பீத்தவெனின் Bourree,Estudia Remembranza இசைதொகுப்புகள் மிகப் பிரபலமடைந்தன.
ஸெகோவியா பல இசைக்கலைஞர்களுக்கு ஆசானாகவும் இருந்திருக்கிறார்.அப்போது அவர் ஐந்து குறிக்கோள்களை தன் மாணவர்களிடமும்,இசை உலகத்திடமும் உரைத்தார்.அதில் குறிப்பாக கிராமிய இசையிலிருந்து கிதாரை பிரித்து அதற்கென தனி இடத்தை இசைக்கருவிகளின் குழுவில் சேர்ப்பது, சிம்பனி இசை உலகத்தில் கிதாரை ஒரு முக்கிய கருவியாக்குவது.இந்த இரண்டையும் அவர் வாழும் காலத்திலேயே சாதித்து காட்டினார்.
கிராமி உட்பட பல விருதுகளை வாங்கிய ஸெகோவியா பாக்கின் மிக கடினமான இசைக்கோர்வையான Chaconneக்கும் கிதார் வடிவம் கொடுத்தார்.ஜொக்கின் ரோட்ரிகோ(Joaquin Rodrigo),ஜான் வில்லியம்ஸ்(John Williams) போன்ற மிகப்பெரிய கலைஞர்கள் ஸெகோவியாவிடம் பயின்றவர்களே.
இருபதாம் நூற்றாண்டில் பல காலமாக ஒதுக்கப்பட்ட marginality மைய நீரோட்டத்தில் வந்து சேர்ந்ததில் கிதாரும் ஒன்று.

Estudia Remembranza
Bourree

நல்ல விடயங்கள்... இந்த கித்தாரில் நம் கர்நாடக சங்கீதம் கூட பிரசாந் எனும் இளைஞர் அற்புதமாக வாசிக்கிறார். எப்படி வயலின்;மென்டலின்;சக்சபோன்;கிளாரினட்,மோர்சிங் -நம் இசைக்குள் புகுந்து நல்ல
இடத்தைப் பிடித்ததோ...அப்படி கித்தாரும் பிடித்துள்ளது. பிரசாந் உலகில் பல அரங்குகளில் வாசித்துள்ளார்.
Posted by: johan-paris | 04/21/2009 at 09:51 AM
Thanks again for the article post.Thanks Again. Great.
Posted by: Kylie | 01/23/2014 at 12:19 PM