வம்சி பதிப்பகத்தினர் நடத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் இங்கே. போன வருடம் நான் எழுதிய 'இரைச்சலற்ற வீடு' கதை ரெண்டாம் பரிசு பெற்றுள்ளதை மிக்க மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன். முதல் முறையாக நான் எழுதுவது அச்சில் வெளியாகிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் விஷயமாக உள்ளது. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். நடுவர்களுக்கும் (எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், தமிழ்நதி) வம்சி பதிப்பக ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து நான் எழுதும் அனைத்துக்கும் கறாரான விமர்சனங்களை அளித்து வரும் நண்பர் நட்பாஸ் அவர்களுக்கும் இந்தக் கதையில் இருந்த எழுத்துப்பிழைகளை சுட்டிக் காட்டிய நண்பர்கள் ஆர்.கோபி, கபீஷ் இருவருக்கும் பலப் பல நன்றிகள்.
நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Recent Comments