இந்த தொடர் கவர்ச்சியில் என்னையும் அழைத்த பாஸ்டன் பாலாஜிக்கு நன்றி. மரத்தடி,திண்ணை என ஐந்து வருடங்களாக அவ்வப்போது எழுதிவந்தாலும்,இணையத்தில் மிகச் சமீபத்தில்தான் எழுத ஆரம்பித்துள்ளேன். பாலாஜி நான் எழுதிய கதையைப் படித்து தாராள வார்த்தைகளோடு பாராட்டியிருந்தார். என் கதையின் முதல் விமர்சனமும் அதுவே.அவருக்கு நன்றி. //இவரைக் குறித்து அதிகம் தெரியாது.// என என்னை அறிமுகம் செய்ததால் என்னைப் பற்றிச் சில தகவல்கள். ரா.கிரிதரன், வசிப்பது - லண்டனில், தற்சமயம் BBC மென்பொருள் துறையில் பணி. வெளியே சொல்லிக் கொள்ளக்கூடியது கொஞ்சும் iPlayer ஸ்டிரீமிங்கில் என் சிறு பங்கு மட்டுமே. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு? பாலாஜி டைமிங் கார்டூன்கள் தவிர, அவரது குத்திக்கல் தெரு ரசித்துப் படித்தேன். உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? யார் சொல்லியும் கேட்காமல், தடாலடியாக என் தாத்தா வைத்த பெயர். உருவத்தில் தவிர மலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான் அக்மார்க் கடலோர தடிப்பயல். உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா? ம்ஹூம்..கொஞ்சம் சின்னதாக, ஸ்டைலாக இருந்திருக்கலாம். துரைமார்கள் Gere எனக் கூப்பிடுவதாவது தவிர்க்கப்பட்டிருக்கும். கடைசியாக அழுதது எப்போது? என் மனைவி பிரசவத்தின் போதும் பக்கத்திலிருந்து, குழந்தை பிறந்தபோது கூடவே இருந்தாலும் அப்போதெல்லாம் அழாமல், எப்போதாவது சம்பந்தமேயில்லாமல் அழுகை வரும். கடைசியாக - தாஜ் ஹோட்டல் தீவிரவாதிகள் பிரச்சனையின் போது - உள்ளிருந்தே பலரையும் காப்பாற்றிய அந்த (பெயர் கூட மறந்துவிட்டது!) டாக்டர் தம்பதியின் பேட்டி, மற்றும் அவர்களால் காப்பாற்றப்பட்டோரின் கதை பார்த்தபோது எதற்கென்று தெரியாமலேயே அழுதேன். உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா? பேனாவால் எழுதுவது சுத்தமாக நின்றபோதும், அலுவலகத்தில் மார்கர் கையெழுத்து சுத்தமாக பிடிக்காது. சின்ன வயது கையெழுத்தும் பிடித்ததில்லை. பிடித்த மதிய உணவு? வெளியில் - பீட்ஸா, Salad . வீட்டில் - சாம்பார், உருளைக்கிழங்கு, அப்பளம். நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா? இணையத்தில் நண்பர்களே கிடையாது. பொதுவாகவே தனிமை விரும்பி. நேரில் வலிய போய் பேசும் பழக்கம் சுத்தமாகக் கிடையாது. கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா? பாண்டிச்சேரியில் கல்லூரி நாட்களில் அடிக்கடி கடலில் குளித்திருக்கிறேன். அதில் இருக்கும் dynamicity அருவியில் கிடைக்காது. ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்? தெரியாதவர் என்றால் - அவர் சிரித்துப் பேசுகிறாரா, போரடிக்கிறாரா என கவனிப்பேன். தெரிந்தவரிடம் - நானே அடுத்து என்ன பேசுவது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பேன்; ஆனால் சில நிமிடங்களில் சகஜமாகி முகத்தை நோக்கித் தான் பேசுவேன். உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன? சகட்டுமேனிக்கு எல்லாவற்றிலும் வரும் ஆர்வம் பிடித்தது. அந்த ஆர்வத்தை ஒரு பழக்கமாக்கிக்கொள்வதற்குள் நழுவவிடுவது பிடிக்காது. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது? எங்கெங்கு காணினும் புத்தகங்களடா என இருக்கும் வீட்டில், புத்தகங்களுடன் என்னையும் சகித்துக்கொள்வது. அக்கடா என உட்கார நினைக்கும் வாரயிருதியில், சாப்பிட யாரையாவது அழைத்திருப்பது. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்? சமைப்பது.ஏன்னா என் மனைவி அப்படி சமைப்பார்கள் :) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்? அப்பா. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்? கறுப்பு நிற பைஜாமா, அக்குள் தெரியாத வெள்ளை பனியன். என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க? எனக்கு எப்போதும் மெலிதாக இசை ஒலித்துக்கொண்டேயிருக்கவேண்டும். இப்போது கேட்பது - Miles Davis இன் 'Kind of Blue'. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை? நீலம். பிடித்த மணம்? ரோஜா, Subway. பிடித்த விளையாட்டு? பார்க்கப் பிடிப்பது - டென்னிஸ். விளையாட - கிரிக்கெட். கண்ணாடி அணிபவரா? இல்லை. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்? காமடி, திகில் படங்கள். கொஞ்சமேனும் வரலாறு சம்பந்தமாக இருந்தால் யுத்தப் படங்கள். கடைசியாகப பார்த்த படம்? Álex de la Iglesia இயக்கிய Perfect Crime பிடித்த பருவ காலம் எது? குளிர் காலம். என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க? ஒரே நேரத்தில் பல புத்தகங்களை மேயப் பிடிக்கும். தற்சமயம் எனக்கு Biography சீஸன். 1. Wodehouse on Wodehouse - P.G.Wodehouse 2. Gustav Mahler Remembered 3. Conversations in a Cathedral - Mario Vargas Llosa 4. நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்? புதிதாக எடுத்த படம் ஏதாவது பிடிக்கும்போது. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்? பிடித்தது - ரிங்டோன், பிடிக்காதது - அலாரம். வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு? முதலில் தனியாகச் சென்றது சென்னை பட்டிணத்திற்கு. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா? ம்ஹூம்.. வெங்காயச் சாம்பார், வெஜி கட்லட் போன்ற ஐட்டங்களை என்னைப் போல சுவையாக சரவணபவனில் கூட செய்ய மாட்டார்கள். தற்போதைக்கு ஆணித்தரமான இருக்கும் ஒரே திறமை சமைப்பதுதான். உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்? சளைக்காமல் மதவெறியால் காலாகாலமாய் மனிதன் செய்துவரும் கலாட்டா. ஆயுதத்தைத் தூக்காமல் சிக்கிச் சின்னாபின்னாமானது பெண்களே. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்? எழுதுவதைத் தவிர, எனக்குள் தேவையில்லாத நேரங்களில் வரும் நிம்மதியின்மை (restlessness). உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்? பாரீஸ், பாரீஸ், பாரீஸ் மற்றும் வாராவாரம் செல்லும் என் நூலகம். எப்படி இருக்கணும்னு ஆசை? சோம்பேறித்தனம் பார்க்காமல் படிக்கவும்/எழுதவும்...இரண்டாண்டுகள் பிரெஞ்சு படித்தும் அதை மறந்து - இப்போது தொடங்கியிருப்பதை தக்க வைத்துக்கொள்ளவும்...மனைவி,குழந்தையுடன் அதிக நேரம் செலவிடுவது. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க? ஹே ஹே.. ஒரு வரியில் சொல்ல முடிஞ்சா பரவாயில்லையே... வாழ்க்கை - பிரசவம் போல, நமக்கு என்னடான்னு வெளியே நின்றுகொண்டிருப்போம் , நம்ம கிட்ட கண்ட்ரோலே இருக்காது.. ஆனா கதவு திறந்தபிறகு மொத்தமாக நம்மை கவுத்துவிடும் தருணங்களின் 70 mm படம்தான் வாழ்க்கை. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன? தற்சமயம் பாலாஜி , பத்ரி, ஹாரன்பிரசன்னாவைத் தவிர மற்ற யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது. தெரிந்தவர்களும் ஏற்கனவே பதிந்துவிட்டனர்..இவர்களுக்கு நேரம் இருக்குமா எனத் தெரியவில்லை..ஆனாலும் நான் அழைக்கபோவது:
தமிழில் - ஹே ராம் (எத்தனாவது முறை?) , பசங்க.
பத்ரி - இவரை நேரில் பார்த்ததில்லை. ஆனால் இவர் வலைப்பகுதிக்கு தினமும் ஆஜராகிவிடுவேன்.
ஹாரன்பிரசன்னா- கடந்த ஆண்டு எனி இந்தியம் புத்தகக் கடையில் சந்தித்து சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
சுரேஷ் கண்ணன் - இவரைப் பற்றி அதிகமாகத் தெரியாது. ஆனால் அவர் வலைப்பக்கத்தை தினமும் படித்து விடுவேன்.
Recent Comments