* நார்வே நாட்டு மொழியான நார்வேஜியனில் ஒஸ்லோ என்றால் 'கடவுள் காலடி நிலம்' என்று பொருள்.
முதல் பகுதி இங்கே
* நார்வே நாட்டு மொழியான நார்வேஜியனில் ஒஸ்லோ என்றால் 'கடவுள் காலடி நிலம்' என்று பொருள்.
முதல் பகுதி இங்கே
போன வருடத் துவக்கத்தில் நண்பர் சித்தார்த் வெங்கடேஷுடன் பயண நூல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பிரபல ஆங்கில பயண நூலான Slowly Down the Ganges பற்றி கூறும்போது தமிழிலும் நதியோடு செல்லும் பயணங்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு, “காவேரியில் பயணம் பற்றி ’நடந்தாய் வாழி, காவேரி’ என்று ஒரு கிளாஸிக் புத்தகம் இருக்கே,” என அறிமுகப்படுத்தினார். அப்படித்தான் தி.ஜானகிராமன் - சிட்டி இணைந்து எழுதிய புத்தகம் எனக்கு அறிமுகமானது. சிலப்பதிகாரத்திலிருந்து பெற்ற உந்துதலால் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது என நண்பர் மேலும் கூறி என் ஆர்வத்தை அதிகரித்தார். அடுத்த சில மாதங்களில் இந்தியாவுக்கு வந்தபோது பல பிரபல தமிழ்ப் புத்தகக் கடைகளில் கிடைக்காமல், ஹிக்கின்பாதம்ஸில் விற்காமல் ஓரமாக ஒதுங்கியிருந்த பிரதியைக் கையகப்படுத்தினேன்.
அதுவரை, தமிழில் பயணங்கள் குறித்து நான் படித்தவை மேற்கு இந்தியப் பயண நூலான ’வெள்ளிப்பனி மலை மீது’ தவிர, எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம் போன்ற எழுத்தாளர்களின் கட்டுரைகள் மட்டுமே. இவர்களது பல புனைவுகளும் பயணங்களை அடிப்படையாகக் கொண்டவை. பயணத்தில் கிடைக்கும் அனுபவத்தை பல புனைவுகளாக மாற்றி அமைக்கும்போது கற்பனைக்கும் கிட்டாத எல்லைகளை தாண்ட முடிகிறது. அப்புனைவுகளுக்கு மிகப் பெரிய பலமாக இருந்தாலும் பல சமயங்களில், புனைவுகளாகவும், மறக்க முடியாத நிகழ்வுகளாகவும் மாற்றி எழுதும்போது பயண அனுபவங்களின் ஆதார சுருதி மாறிவிடுகிறது. இலக்கற்று பயணம் செய்பவர்களின் சிதறுண்ட குறிப்புகள் பெரும் தேடல் அனுபவமாக நம் முன் விரிகிறது. எந்தவித முனைப்பும் இன்றி கால் செல்லும் வழியெல்லாம் தங்கள் புலன்களைத் திறந்து வைத்தபடி பயணம் செய்யும்போது அனுபவங்கள் முற்றிலும் வெவ்வேறு பரிமாணங்களாகக் குவிகின்றன. இவற்றை ஒருமைப்படுத்தி புனைவாக மாற்றும்போது ஒரு திட்டமிட்ட வடிவத்துள் அடங்கி, தெளிவான குறிக்கோளாக அந்த அனுபவங்கள் மாறுகின்றன. இப்புனைவுகள் எந்த அளவு பயணங்களின் சாரத்தைத் தொகுத்தளிக்கும் என்பது கேள்விக்குரியது. இதனால், பயண அனுபவங்கள் புனைவுகளாக மாறுவதை விட, வரலாறு மற்றும் சமூகப் பிரஞையோடு குறிப்புகளாக இருந்தால், பரந்த அனுபவ சுரங்கத்தை அளிப்பது போல் தோன்றுகிறது.
ஒரே ஆன்மிக அனுபவத்தை விவரிக்கும் பல மதங்கள் போல், ஒரே நதியைப் பற்றி பல பயணக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் ஒரே நதியின் வெவ்வேறு பரிமாணத்தை காட்டும். துருவங்களிலும் மலைகளிலும் பனிப்பாளங்களாக, சிறு ஊற்றுகளாக, உயரமான வீழ்ச்சிகளாக, மேகத்தைக் கறுத்து, கனக்க வைக்கும் நீர் பொட்டலங்களாக தண்ணீர் பல வடிவங்களில் உருமாறியபடி இருப்பதால், தண்ணீரின் பல முகங்களைப் பற்றிய சொற்குவியல்களாக மட்டுமே நதியை விவரிக்க முடியும். பயணம் செல்வோரின் மன விசாரத்தைப் பொருத்து நதியின் ரூபம் மாறும். தங்கள் அனுபவங்களை எழுத்தில் வடிக்கும்போது, நதியின் சித்திரம் உண்டாக்கிய மன எழுச்சியைப் பொருத்து பயணக் கட்டுரைகளின் தரம் அமைந்திருக்கும். நல்ல இலக்கியம் மற்றும் கவிதை அறிமுகம் இருக்கும் பயணியின் கண்களுக்குத் தெரியும் நதி, சுற்றுலாப் பயணியின் பார்வைக் கோணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். பல சமயங்களில் இருவரும் வெவ்வேறு நதிகளைப் பார்த்தனரோ எனத் தோன்றும்.
சிட்டி, தி.ஜானகிராமன், ராஜகோபாலன் மற்றும் சில நண்பர்கள் காவிரியோடு பயணம் செய்திருக்கிறார்கள். பூம்புகாரிலிருந்து ஆரம்பிக்க எண்ணியிருந்தாலும், பெங்களூர் - குடகுப் பாதையிலிருந்து காவிரியின் மூலத்தை நோக்கியே இவர்களது பயணம் தொடங்குகிறது. குடகு, சிவசமுத்திரா நீர்வீழ்ச்சி, ஸ்ரீரங்கப்பட்டினம், மைசூர், பாகமண்டலம்,மெர்க்காரா, என கர்நாடக மாநில எல்லையிலிருந்து பல கிளை நதிகள் வழியே தலைக்காவேரி எனும் காவிரி மூலத்தை அடைகிறார்கள். பின்னர் அதே வழியாக திரும்பப் பயணித்து, ஹோகெனக்கல்,கரூர், திருச்சி, தஞ்சாவூர்,கொள்ளிடம், கல்லணை, காவேரிப்பூம்பட்டினம் அடைந்து காவிரி கடலில் சேர்வதில் பயணம் முடிகிறது.
நதி மூலத்திலிருந்து விழுந்தோடி கடல் அன்னையை கலக்கும் இடமான காவிரிபட்டினம் வரை காவிரியோடே பயணம் செய்வது இப்பயணத்தின் நோக்கம். தேடலின் விசித்திரம் சென்றடையும் இடத்தில் இல்லை; பயணத்தின் நுண்மையான அங்கங்களில் மட்டுமே அதன் ஆத்மா அமைந்திருக்கும் என்பதுபோல், நதியைத் தவிர பிற திசைகளையும், பல காலங்களையும் அவர்கள் கடந்தார்கள். பல இடங்களில் நதி காட்டுக்குள் புகுந்து, மலைக்களுக்கிடையே மறைந்து, ஊற்றாகப் பல இடங்களில் வெளிப்பட்டு விளையாட்டுக்காட்டியதால் அவர்களுக்கு அதன் முழு பரிமாணம் தெரியவில்லை என்ற குறை இருந்திருக்கிறது. மேலும், காரில் மட்டுமே பயணம் செய்ததால் காவிரி கரையோரம் இருந்த முக்கியமான ஊர்களை மட்டுமே பார்க்க முடிந்தது. பல மாதங்கள் பயணம் செய்தால் மட்டுமே காவிரியின் ஒவ்வொரு பகுதியையும் பார்க்க முடியும். அதற்கான நேரம் இல்லாததால் இப்பயணத்தை ஒரு முழுமையான அனுபவமாக இவர்கள் கருதவில்லை.
*
முழு கட்டுரையையும் இங்கு படிக்கலாம்
குடும்பத்துடன் நார்வே செல்ல வேண்டும் என இரண்டு வருடங்களாக இப்போது அப்போதெனத் திட்டம் போட்டு வந்தாலும், கடந்த மாதம் தான் சாத்தியமானது. சுற்றுலாப் பயணி போல் செல்லாமல் ஐரோப்பா முழுவதும் 'பேக் பேக்கிங்' (back packing) செய்ய வேண்டும் என ஆசை இருந்தது. என் அலுவலக நண்பர்கள் சிலர் அவ்வாறு ஐரோப்பாவின் பெரும் பகுதியைச் சுற்றியுள்ளார்கள். ஒரு பெட்டியில் சில மாற்றுத் துணிகள் மற்றும் பயணத்துக்குத் தேவையான இத்யாதிகள். இரவு தங்குவதற்கு couch surfing எனப் பலர் தங்கள் சோபாக்களில் தங்குவதற்கு இலவசமாக இடம் தருவார்கள். ஆங்காங்கு இப்படி தங்கிக்கொள்ள வேண்டியது தான். எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் YMCA ஹாஸ்டலில் தங்கினால், சமையலறை, துணி துவைக்கும் அறை என பல வசதிகள் இருக்கும். இதெல்லாம் பேச்சிலராக இருக்கும் போது தான் சாத்தியம். குடும்ப வாசிகளுக்கு இவை பகல் கனவு மட்டுமே. மேலும் இரண்டு வயதுக் குழந்தையுடன் முடியவே முடியாது.
நார்வே நாட்டை சுற்றிப் பார்க்க குறைந்தது பத்து நாட்கள் தேவையென நண்பர்கள் தெரிவித்திந்தனர். மேலும், இணைய பிரயாணக் குழுமத்தில், ஒட்டுமொத்தமாக ஒரு வாரம் கூட இல்லாமல் நார்வேயுக்குள் நுழையாதே என எச்சரித்திருந்தனர். ஆனால், பத்து நாட்களுக்கு எவ்வளவு மூட்டைகளைக் கொண்டு செல்வது. குழந்தைக்கு வெளி உணவு கொடுப்பது கொஞ்சமும் சாத்தியமில்லை. சிறிய அரிசி குக்கர் சகிதம் கிளம்பினால் தப்பிக்கலாம் எனத் தெரிந்தது. சாமான் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டாமென என் மனைவியிடம் விண்ணப்பித்திருந்தேன். மிகக் குறைந்த சாமான்களுடன் பயணம் செய்வது என்பது என் பகல் கனவு என மனைவிக்குத் தோன்றியதால், பத்து நாட்களுக்கு நான்கு மூட்டைகளுடன் தயாராகிவிட்டோம்.
பயணம் செய்வதை விட , அதற்காக பயணத் திட்டம் மற்றும் ஆயத்தங்கள் செய்வதை என் மனைவி அதிகம் விரும்புவார். இரண்டு மாதங்களாக பல திட்டங்கள் தீட்டி, பல இணையப் பிரயாணக் குழுமங்களில் ஆலோசித்து ஒரு மாதிரி 'குன்சாக' பயணத் திட்டம் தயார் செய்திருந்தார். நார்வே மிகப் பெரிய நாடாக இருப்பதால், ஆசைப்படும் பல பகுதிகளை பத்து நாட்களில் பார்க்க முடியாது எனத் தோன்றியது. எதுவானாலும், கிளேஷியர் (Glacier), பியார்டுகளைப் பார்த்தபடி சில நாட்கள் தங்குவது என்பதில் தீர்மானமாக இருந்தோம்.
மிக செழிப்பான இயற்கை அழகுக்கு ஸ்கான்டினேவியன் நாடுகள் பேர் பெற்றவை. குறிப்பாக, நார்வே வடதுருவத்தொடு இணையும் இடத்தில், பளீர் பளீரென 'வடக்கு வெளிச்சம்' (Northern Lights) மற்றும் இருபத்து நான்கு மணிநேர சூரியன் சில உடன் பிறப்புகளுக்கு உவப்பாக இருந்தாலும, தூங்கு மூஞ்ச்சிகளுக்குப் பிரச்சனையே. இருபத்து நான்கு மணி நேரமும் வெளிசசம் அடித்தால் எப்படித் தான் தூங்குவது? ஆனால், Northern lights காண வடதுருவம் வரை செல்ல வேண்டும் என்பதால், முதலிலேயே இப்பகுதி எங்கள் திட்டத்திலிருந்து கழண்டது.
நார்வே கடல் கிழக்குப் பகுதியிலிருந்து ஆர்டிக் துருவம் வரை செல்ல ஹர்ட்டிகுர்டன் எனும் கப்பல் பயணம் செய்தாகவேண்டும். கோபன்ஹெகன் தவிர பின்லாந்து, ஸ்வீடன் போன்ற ஸ்கான்டினேவியன் பெரும் நிலப் பகுதியை கடக்க கடல் வழி ஹர்ட்டிகுர்டன் கப்பல் பயணம் தான் ஒரே வழி. இது பல கிராமங்களுக்கு சரக்கு கப்பலாகவும் இருக்கிறது. வட துருவம் வரை செல்ல நார்வே நாட்டின் பெர்கன் நகரத்திலிருந்து எட்டு நாட்கள் பயணம் செய்தாகவேண்டும்.
இரு மலைக்கு நடுவே இருக்கும் குறுகிய பள்ளத்தாக்கு முழுவதும் கடல் நீரால் நிரம்பியிருந்தால் அதை ஃபியார்ட் (Fjord) என்றழைக்கிறார்கள். மிகக் குறுகலான பாதையின் இரு பக்கங்களிலும் மிக உயரமான மலைத் தொடர். பள்ளத்தாக்கு முழுவதும் கடல் நீர் நிரம்பியிருப்பதால், கரையோர ஊர்களும் கடல் மட்டத்திலிருந்து சிறிது உயரத்தில் இருக்கின்றன. நார்வே நாட்டு கிழக்கு எல்லை முழுவதும் ஆர்டிக் எல்லைவரை இப்படிப்பட்ட ஃபியார்டுகளால் நிரம்பியுள்ளது.
நார்வேயின் மேற்குப் பகுதியில் இருக்கும் தலைநகரம் ஓஸ்லோவுக்கும், கிழக்கு கடல் எல்லைப் பகுதிகளான பெர்கன் (Bergen) ,அலிசண்ட் (Alesund) போன்ற இடங்களுக்கு மட்டும் போவதாகத் தீர்மானித்தோம். ஃபியார்டுகளைப் பார்க்க பெர்கனிலிருந்து வட துருவம் வரை செல்லும் ஹர்ட்டிகுர்டன் கப்பலில் மூன்று நாட்கள் பயணம் செய்யலாம் என இணையக் குழுமங்களில் கூறியிருந்தனர்.
ஹர்ட்டிகுர்டன் பற்றி தனியாகச் சொல்லவேண்டும். நார்வேயிலிருந்து வட துருவம் செல்லும்வரை சிறு தீவுகளும், கிராமங்களும் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. வருடத்தில் எட்டு மாதங்கள் பனியில் மூழ்கியிருப்பதால், தரை வழி, விமான வழி இரண்டுமே இவ்விடங்களுக்குச் சிரமம் தான். கப்பல் மட்டுமே இத்தீவுகளுக்கும், கிராமங்களும் ஜீவாதாரம். ஹர்ட்டிகுட்டன் எனும் பெரிய கப்பல், ஆரம்பத்தில் சரக்கு கப்பலாக இவ்விடங்களுக்கு செயல்பட்டது. வட துருவத்தை சென்றடைய எட்டு நாட்கள் எடுக்கும். வழியில் இருக்கும் கிராமங்களில் சில மணி நேரங்கள் நின்று சரக்கு பரிவர்த்தனை நடக்கும். திரும்ப துருவத்திலிருந்து கிளம்பி, மேற்கு திசை வழியே ஒஸ்லோவை வந்து சேரும்.
இன்றும் இக்கப்பல் சரக்கு பரிவர்த்தனைக்காக பயன்படுகிறது. ஆனால், பல அற்புதமான கடல் பகுதிகளையும், பியார்டுகளையும் கடப்பதால், சுற்றுலா பயணிகளுக்காக தனி தளத்தை இக்கப்பலில் அமைத்துவிட்டார்கள். பெர்கனிலிருந்து கிளம்பி, ஹர்டாங்கெர் ஃபியார்ட் (Hardanger Fjord), சோகன் ஃபியார்ட் (SogneFjord) பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு, வழியில் ஸ்டிர்யின் (Stryn) பகுதியில் இறங்கி, பெர்கன் நகருக்கு ரயிலில் திரும்பலாம் என்பது திட்டம். வட துருவம் வரை செல்ல ஆசை இருந்தாலும், எட்டு நாட்கள் கப்பல் பயணத்துக்கு எங்கள் உடல் ஒத்துழைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. மேலும், எங்கள் இரண்டு வயதுப் பெண்ணுக்கு எந்தவிதமான கேளிக்கையும் அந்த கப்பலில் இல்லை என்பதும் இதற்குக் காரணம்.
ஒஸ்லோவில் முதல் இரண்டு நாட்கள் கழிப்பதாக இருந்ததால், ஏப்ரல் 22ஆம் தேதி காலை லண்டனிலிருந்து நேராக ஒஸ்லோவுக்கு பி.எம்.ஐ வழி பறந்தோம். ஐரோப்பாவின் முக்கிய நகரங்களை இரண்டு மணி நேரங்களுக்குள்ளாகவே விமானத்தில் அடைந்துவிடலாம். இதனால் பலர் வாரயிறுதி சுற்றுலாவை பாரீஸ், ரோம், ஆம்ஸ்டர்டாம் போன்ற நகரங்களில் கழிப்பார்கள். முன்கூட்டியே பதிவு செய்தால் நல்ல உள்ளங்களுக்கு மிகக் குறைந்த கட்டண விமான சீட்டுகள் கிடைக்கக்கூடும். எனக்கு நல்ல உள்ளம் தொடும் தூரத்தில் தான் இருக்கிறது போலும். இது வரை ஓரிரு டிக்கட்டுகளில் அவற்றை இழந்துள்ளேன்.
ஒஸ்லோவில் இறங்கி நாங்கள் தங்குமிடத்துக்கு செல்வதற்குள், ரயிலில் ஓர் இந்தியக் குடும்பத்தை சந்தித்தோம். எங்கள் பொட்டிகளைப் பார்த்து, இந்தியாவிலிருந்து சட்டிப் பானை எல்லாம் அடகு வைத்துவிட்டு ஓட்டுக்கா ஊர் மாறிவிட்டோம் என நினைத்தார்களோ என்னவோ, வீடு பிடித்துவிட்டீர்களா, எவ்வளவு வாடகை என்றெல்லாம் கேட்கத் தொடங்கிவிட்டனர். பொட்டிகளை மறைத்துவிட்டு எங்கள் பத்து நாள் திட்டத்தைக் கூறினோம். அவர்களும், கோபன்ஹேகனிலிருந்து நான்கு நாள் சுற்றுலாவுக்காக வந்தவர்களாம். அடுத்த நாள் நகரத்தில் சுற்றும்போது சிந்திப்போம் என இடம், நேரம் குறித்துக் கொண்டு எங்கள் ஹோட்டலை அடைந்தோம்.
பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.
Recent Comments