நண்பர் நட்பாஸ் தளத்தில் எழுதிய சம்பவக்குறிப்பு. நிமிஷக்கதையான்னு படிச்சிட்டு முடிவு பண்ணுங்க.
*
பார்க்காதது போல நடந்து சிறு கல் தடுக்கி கீழே விழும் பபூனுக்கு இருக்கும் மதிப்புக்கு கொஞ்சம் மேலேதான் பள்ளிக்கூட தமிழ் வாத்தியார்களுக்கு. அதுவும் ஆங்கில வழிப் பள்ளி என்றால் சொல்லவே தேவையில்லை. பபூனுக்குக் கூட பெஞ்சு சீட் கிடைத்துவிடும். தமிழ் வாத்திகளுக்கு தரை டிக்கெட்டுதான்.
இன்னிக்குக் மார்னிங் வரைக்கும் நானும் இது கரெக்டுதான்னு நினைச்சேன்.
பெரிய பொயட் பெயர் வெச்ச எங்க ராமலிங்கம் வாத்தி செய்யும் சேஷ்டைகள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. நான் படிப்பது ஆங்கிலோ இந்தியப் பள்ளி என்பதால் பாதர்களின் பாதரேஷன் நிறைய உண்டு. வகுப்பில் பாடம் நடக்கும்போது விண்டோ வழியா எட்டி டிசிப்ளின் மெயிண்டயின் செய்வது அவர்களது வேலை. ஆனா அப்படி ஸ்டடி செய்யும்போதுதான், வாத்தியின் சேஷ்டை ஆரம்பமாகும்.
“டேய் பசங்களா, இந்த காலத்துல மட்டுமில்ல, அந்த காலத்துலக் கூட உளவுத்துறை உண்டு. வணிகம் செய்யறேன்னு உள்ள நுழைஞ்சு உளவு பார்த்து சொல்றது அந்த காலத்து ஸ்டைலு. இந்த காலத்தைப் பத்தி உங்களுக்குச் சொல்ல வேணாம். ஆனா, ஆசைப்பட்டு எட்டிப் பார்த்து தொட நினைச்சவங்க மூக்கு அறுந்தது நமக்குத் தெரிஞ்ச கதை தானே! சரி செய்யுளைக் கவனமா படிச்சிக்கோங்க..”
நாங்கெல்லாம் கஷ்டப்பட்டு சிரிப்பை கண்ட்ரோல் பண்ணிக்குவோம். அருணால மட்டும் முடியாது. விரலு வழியா எச்சி தெறிக்க சிரிச்சிருவான். லஞ்சுக்கு அப்புறம் நடக்கிற கிளாசுன்னா பர்ர்ரு தான். வெடிச் சிரிப்பா எல்லாரும் சிரிக்கத் தொடங்கிடுவோம். எங்க ரோவுக்கு பின்னாடி சிரிப்பு போறதுக்கு முன்னாடி கேஸ் கண்டினியு ஆகிடும்.
ப்ரைமரி வாத்தி சீனிவாசன் எதையும் ராமலிங்கம் வாத்தி மாதிரி வெளிப்படையா சொல்லமாட்டாரு. ரொம்ப கோவம் வந்தா உளவுக்காரங்க இருக்காங்களான்னு சுத்திப் பார்த்துவிட்டு உதட்டை மடக்கி தலை முடியைப் பிய்க்கிறா மாதிரி ஆக்ஷன் செய்வார். அப்புறம் அந்த கை போகும் இடம் தான் செம கேஸ் பரவக் காரணமாயிருக்கும்.
கிளாசுக்கு உள்ள தான் இப்படின்னா, பி.டி பீரியடில் அரட்டை அடிக்கும்போதும் தமிழ் வாத்திங்க சொல்றதை வெச்சுத்தான் கிண்டல் அதிகமாப் பண்ணுவோம்.
இன்னிக்கும் அப்படித்தான். சும்மா வேடிக்கைப் பார்த்திருந்த என் தலை மேல வாட்டர் பாட்டிலை கவிழ்த்திட்டு டீச்சர் ரூம் வாசலுக்கு அருண் ஓடிட்டான். நான் சேஸ் பண்ணா, சீனிவாசன் வாத்தி மாதிரி ஆக்ஷன் காட்டிகிட்டே கிளாஸ் இருக்கிற பக்கம் ஓடறான் அவன், திருப்பத்தில ராமலிங்கம் வாத்தி வர்றதைப் பார்க்காம.
“போடாங்க…..” என அருணைப் பார்த்து நான் கத்த, வாத்திய எதிர்பார்க்காத அவன் நேரா போயி அவர் மேல மோதி கீழே விழுந்திட்டான்.
ஒரு நிமிஷம் எனக்கு மூத்திரம் வந்திருச்சு. கையில டஸ்டரை உருட்டிகிட்டே வாத்தி என்னையும் அருணையும் பார்க்கறாரு. அருண் விழுந்தவன்தான் – “அவன்தான் சார், அவன்தான் சார்” உளறிகிட்டே பிட்ஸு வந்தவன் மாதிரி படுத்தபடி பின்னாடியே போக, என் தொடை நடுங்க, “சாரி சார், சாரி சார்” என பயந்தபடி ஓடப் பார்த்தேன்.
கொஞ்ச நேரம் எங்களையே பார்த்துகிட்டிருந்த வாத்தி,
“ஏண்டா, கை கால் மாதிரி அதுவும் ஒரு உறுப்புதான? அதை வெச்சு ஏண்டா திட்டிக்கிறீங்க!” என கைக்கொடுத்து அருணை எழுப்பிவிட்டார்.
Recent Comments