பீட்டாவில் இருக்கும் Timeglider ஒரு Flex application(Web 2.0). இதில் நம்மால் காலத்தின் அளவுகளை கூட்டிக் குறைத்து விவரங்களைச் சேர்க்க முடியும்.
இதைப் போல போன நூற்றாண்டு தொடங்கி இலக்கிய தடத்தையும் வரையறுக்க முடியும் - பாரதி , புதுமைபித்தன் , வாமு கோமு என செல்ல முடியும். இதையும் தற்போது தொடங்கியுள்ளேன். எவ்வளவு எழுத்தாளர்களைப் பற்றி எழுத முடியுமெனத் தெரியவில்லை.
தென்னகக இசையியலில் இப்போதுதான் மாணிக்க வாசகர் - திருவாசகம் வரை வந்துள்ளேன். இதில் குறிப்பிட்டுள்ள காலங்கள் செல்லத்துரை, சே.ச அவர்களின் 'தென்னக இசையியல்' புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டது. மேலும் பத்தாம் நூற்றாண்டிற்கு பின்னரும் இதில் தகவல்கள் இடப்படும்
தமிழ் இசையியல் தடமாக இதைக் வரையறுத்ததால், பக்தி இயக்கமும், தமிழர் வாழ்வியல் நூல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இதில் ஏதேனும் முக்கியமான விவரம் சேர்க்கப்படவேண்டுமானால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.
Traditionally, South Indian music is also called Carnatic Music.
As per early Tamil language, (South Indian Language) literature was broadly classified as 'Iyal'(Literature/Texts) ,'Isai' (Music),'Nadagam'(Drama). This timeline captures life span of all Tamil language literature as available today. Also intermingled in the literature are proofs that early tamil language had musical elements compared to that of Carnatic/Hindustani Systems.
பல விவரங்களை சேர்த்து,இதை கூடிய விரைவில் முடிக்க எண்ணம்.
கீழேயிருக்கும் இந்த காலயியந்திரத்தில் முன்னும் பின்னும் சென்று, அந்தந்த விவரங்களை சொடுக்கி மேலும் தெரிந்துகொள்ளலாம்.
Recent Comments