06/16/2010

NEXT POST
மேற்கிசை ஒருங்கிணைப்பாளர் சுபின் மேத்தா வியன்னாவின் பகல் வேளைகளில் மியூசிக் அகாடமியில் இசை கற்றுக்கொள்ளவும், மாலை வேளைகளில் பல இசைக்குழுக்களின் இசையைக் கேட்கவும் சுபின் தொடங்கினார். இங்கு இசையின் முதல் பாடத்தைக் கற்றுக்கொண்டார். மெஹ்லியின் இசைத்தட்டுக்களைக் கேட்டு வளர்ந்த சுபின் இசையின் அடிப்படைகளை நேரடியாகக் கேட்டதில்லை. மோசார்ட், பீத்தோவன் போன்ற இசைமேதைகளின் இசையை இசைத்தட்டில் கேட்பதற்கும், நேரடியாக அரங்குகளில் இசைக்குழு இசைத்துக் கேட்பதற்கும் பல வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்தார். அப்படி என்ன வேறுபாடுகள் இருக்க முடியும்? இசைத் தட்டு பல மென்மையான ஒலிகளை வெளிப்படுத்தாது. ஐம்பதுக்கும் அதிகமான வாத்தியக்கருவிகள் ஒன்றாக இசைக்கும்போது, சில ஒலிகள் மட்டுமே அதிக சத்தத்துடன் ஒலிக்கும். ஆனால் துணை ஒலிகள் இல்லாமல் அந்த இசைப்பகுதி நிறைவு அடையாது. முதன்மையான வயலின், செல்லோ கருவிகள் இசையை வழிநடத்திச் சென்றாலும், பசூன்(Basoon), புல்லாங்குழல், ஓபோ (Oboe) போன்ற பல குழற்கருவிகள் சரியான நேரங்களில் தந்திக்கருவிகளுடன் சேர்ந்தால் மட்டுமே இனிமையான இசை வெளிப்படும். பல சமயங்களில் ஹார்ப்(Harp)...
PREVIOUS POST
மேற்கிசை : மாஹ்லர் Adagietto என்பது மெதுவாக செல்லக்கூடிய இசைக்கான (இத்தாலிய) இசைச் சொல்.இதைப்போல இசையின் meter என்று சொல்லக்கூடிய வேகத்தை குறிக்க பல சொற்கள் ஐரோப்பா இசையில் உள்ளது. நம் கர்நாடக இசையின் தாளம் என்ற பிரயோகத்தை இதனுடன் ஓரளவு ஒப்பிடலாம். ஆனாலும் இவை இரண்டும் வெவ்வேறு வகைப்பட்டவை. எல்லா இசையையும் தாளத்தால் பிரிக்க முடியும். சாதாரணமாக நாம் தாளம் போடுவதால் இந்த ஒலியை பல சிறிய பகுதிகளாக பிரிக்கிறோம். இந்த பகுதிகள் ஒரே அளவில் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.அப்படி பிரிக்கப்பட்ட இசை குறியீட்டு முறையால் தொகுக்க முடியும். இதை Musical Notation(இசை குறியீடு) என்பார்கள். நேர முறைப்படி பிரிக்கப்படும் இசை பல bars என வகுக்கப்படும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள Mahler ஒத்திசைவு (Symphony) Number 5 (Death in Venice) உபயோகப்படுத்தியிருக்கும் Adagietto மெதுவான இசை. இதனாலேயே அதன் அடிநாதமும் சோகமாக நமக்கு ஒலிக்கும்.இதை 1900களில் கேட்ட அனைவரும் இருபதாம் நூற்றாண்டின் உலகப்போர்/அழிவு...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments