08/25/2009

NEXT POST
சங்கம இசையின் முன்னகர்வுப் பரிமாணம் விட்டுப்போன வார்த்தைகள் - சொல்வனம் ராகசாகா விமர்சனத்திற்காக எழுதப்பட்டதில் ஆசிரியரின் கத்திரியில் கீழே விழுந்த சில வார்த்தைகள் - சங்கம இசை என்ற ஃபூஷன் இசை வடிவங்களை இசைக் கலைஞர்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகவே முயன்று வருகின்றனர். இருவிதமான இசை மரபுகளை இணைக்க பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகளில் வடிவேலுப் பிள்ளை முதல் மதுரை மணி அய்யரின் English Note போன்ற வால்ட்ஸ்(Waltz)) கலப்பு முயற்சிகளின் வழியே, இன்று வரை முயன்று வருவது ஆச்சர்யமானது. எந்த ஒரு கலாச்சாரத்தின் இசை வடிவங்களும் மற்றொன்றைப் போல் இருக்காதது ஒரு காரணமாயிருக்கலாம். ஐரோப்பா, ஆப்ரிக்கா, பெர்ஷியா, இந்தியா போன்ற நாடுகளில் தழைக்கும் இசை வடிவங்களில் அடிப்படை இசைக் கூறுகளான தாளம், ராகம் ஒன்றைப் போலவே இருந்தாலும், அதன் உபயோகங்களில் வித்தியாசமிருக்கும்;அவற்றை இணைக்க முற்படும் கலைஞர்களின் தேடல் இரண்டாவது காரணம். இந்த வித்தியாசமான சத்தங்களே சங்கம இசைக்கான காரணமாயிருந்திருக்கிறது. மெலடி, ஹார்மனி போன்ற அதளபாதாள வேறுபாடுகள் தவிர...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments